அன்புமணி வீட்டு கல்யாணம் முடிஞ்ச கையோடு பாமக வைத்த ஆப்பு... செம்ம காண்டில் ஜெயகுமார்..!

By Thiraviaraj RMFirst Published Sep 15, 2021, 11:08 AM IST
Highlights

அதிமுகவை ராமதாஸ் விமர்சிப்பதை ஏற்க முடியாது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் குறித்து விமர்சித்தால் நாங்களும் பாமகவை விமர்சிக்க நேரிடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
 

அதிமுகவை ராமதாஸ் விமர்சிப்பதை ஏற்க முடியாது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் குறித்து விமர்சித்தால் நாங்களும் பாமகவை விமர்சிக்க நேரிடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை. சொந்தக்கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத எடப்பாடி பழனிசாமியோடு கூட்டணி வைத்தால் வெற்றி பெற முடியுமா? என ராமதாஸ் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தல் தொடர்பாக பாமக கட்சியின் உயர்நிலை கூட்டம் நேற்று மாலை நடைபெற்ற நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டிடுவதாக அக்கட்சி தலைவர் ஜி.கே மணி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்றும், நாளையும் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த உள்ளாட்சி, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவதாக அக்கட்சி தலைவர் ஜிகே மணி நேற்று மாலை அறிவித்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில், கடந்த தேர்தல்களின் போது கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை என்று தெரிவித்தாக கூறப்படுகிறது.

அதிமுகவில் சரியான தலைமை இல்லை என்றும் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் சீட் கிடைக்காதவர்கள் தனித்து போட்டியிட்டனர். அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அதனை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் அவர்களை வாபஸ் வாங்க வைக்க முடியவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், ‘’கூட்டணியில் இருந்து வெளியேறியதால் பாமகவுக்குத்தான் இழப்பு, எங்களுக்கு இல்லை. ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். அதிமுகவை ராமதாஸ் விமர்சிப்பதை ஏற்க முடியாது. அதிமுகவின் உட்கட்சி விவகாரம் குறித்து விமர்சித்தால் நாங்களும் பாமகவை விமர்சிக்க நேரிடும். உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப்போட்டியிடுவது அவர்களுக்குத்தான் இழப்பு’’எனத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அன்புமணி மகளுக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது அன்புமணி மாமனார், அமைத்துனர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் அன்பு மணி வீட்டு திருமணம் முடிந்த கையோடு பாமக , அதிமுக கூட்டணிக்கு ஆப்பு வைத்துள்ளது. 
 

click me!