இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு கலக நிலவரம்….  வன்முறையால் ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ.80 லட்சம் கோடியாம்...

First Published Jun 12, 2018, 9:50 AM IST
Highlights
80 lakhs crore loss in india due to riot


2017-ஆம் ஆண்டில் இந்தியாவில் பல்வேறு வன்முறைகளால் ஏற்பட்ட செலவு மட்டும் ரூ. 80 லட்சம் கோடிஎன்று பொருளாதாரம் மற்றும் அமைதிநிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலக அளவில் தீவிரவாதம், அரசியல் பதற்றம் உள்ளிட்ட காரணிகளால் வன்முறைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும்வட கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்டபகுதிகளில் வன்முறைகள் அதிகரித் துள்ளன.

இந்நிலையில், இந்த வன்முறைகளால் ஏற்பட்ட செலவு தொடர்பாக பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் 163 நாடுகளில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.இதில், சர்வதேச அளவில் வன்முறை விளைவுகளால் ஆன செலவின்மதிப்பு 14.76 டிரில்லியன் டாலராக உள்ளது.

இது உலக ஜிடிபியில் 12.4 சதவிகிதம்- நபர் ஒருவருக்குக் கணக்கிட்டால் இதன் மதிப்பு ஆயிரத்து 988 டாலராக உள்ளது என்றும் கூறப் பட்டுள்ளது.

இந்தியாவில் வன்முறைகளால் ஆன செலவுகள் இந்தியப் பொருளாதாரத்தில் 1.19 டிரில்லியன் டாலராக அதாவது  80 லட்சம் கோடிகளாக அதிகரித்துள்ளது என்றும், நபர் ஒருவருக்கு என்று கணக்கிட்டால் தலா ரூ. 40 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ள ஆய்வு, இந்தியாவில் செலவிடப் பட்டுள்ள இந்த தொகை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவிகிதம் என்று மதிப்பிட்டுள்ளது.

உலகில் வன்முறைகளால் அதிகம் செலவிட்ட நாடுகளில் சிரியா முதலிடத்தில் உள்ளது. இந்த நாடு தனதுமொத்த ஜிடிபியில் 68 சதவிகிதத்தைவன்முறைகளுக்காக செலவிட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் 63 சதவிகித செலவுடன் ஆப்கானிஸ்தானும், மூன்றாவது இடத்தில் 51 சதவிகித செலவுடன் ஈராக்கும் உள்ளன. சால்வடார்,தெற்கு சூடான். மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சைப்ரஸ், கொலம்பியா, சோமாலியா உள்ளிட்ட நாடுகள் வன்முறைகளுக்கு அதிகம் செலவிடும் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளன.

உலகிலேயே வன்முறைகளின் விளைவுகளுக்காக குறைவாக செலவிடும் நாடாக ஸ்விட்சர்லாந்து உள்ளது. இந்தோனேசியா மற்றும் புர்கினா உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்து உள்ளன.

வளர்ந்து வரும் நாடுகளைப் பொறுத்தவரையில் சீனா 1,704.62 பில்லியன் டாலர்களும், பிரேசில் 511, 364.9 பில்லியன் டாலர்களும், தென்னாப்பிரிக்கா 239,480.2 பில்லியன் டாலர்களும் செலவிடுகின்றன. வளர்ந்த நாடுகளில் அமெரிக்கா 2.67 டிரில்லியன் டாலர்களும், ரஷ்யா 1,013.78 பில்லியன் டாலர்களும், இங்கிலாந்து 312.27 பில்லியன் டாலர்களும்செலவிடுகின்றன என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

click me!