ரூ. 43 லட்சம் லஞ்சம் வாங்கிய உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ!   தொழிலதிபர் பகிரங்க புகார்…..

Asianet News Tamil  
Published : Jun 12, 2018, 09:21 AM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
ரூ. 43 லட்சம் லஞ்சம் வாங்கிய உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ!   தொழிலதிபர் பகிரங்க புகார்…..

சுருக்கம்

43 lakhs bribe gave to bjp mla in UP

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம், தன்னிடம் ரூ. 43 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சஞ்சய் பிரதான் என்ற தொழிலபதிபர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் மீரட் அருகிலுள்ள காடி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் பிரதான். பொதுப் பணித்துறை உட்பட பல அரசுத் துறைகளில் காண்ட்ராக்டராக இருக்கிறார். அந்த வகையில், மீரட் அருகே தாத்ரிஎனும் இடத்தில் அரசுக் கல்லூரி கட்டுமானப் பணியை காண்ட்ராக்ட் எடுக்க முயற்சித்த அவர், அதிகாரிகளிடம் சிபாரிசு செய்யுமாறு பாஜக எம்எல்ஏ-வான சங்கீத் சோமை அணுகியுள்ளார்.

அப்போது, பிரதானுக்கே காண்ட் ராக்ட்டை பெற்றுத்தருவதாக கூறி எம்எல்ஏ சங்கீத் சோம், ரூ. 43 லட்சத்தைலஞ்சமாக பெற்றுள்ளார். ஆனால், கூறியபடி காண்ட்ராக்ட் சஞ்சய் பிரதானுக்கு கிடைக்கவில்லை. இதுபற்றி சங்கீத் சோமை அணுகி கேட்டபோது, அவர் மழுப்பியுள்ளார். காண்ட்ராக்ட்டை பெற்றுத்தர முடியவில்லை எனும்போது, என்னிடம் லஞ்சமாக பெற்ற ரூ. 43 லட்சம் பணத்தையாவது திரும்பித் தந்து விடுங்கள் என்றுகூறியதற்கும் பதிலில்லை. மாறாக,அலைக்கழிப்புக்கு உள்ளாக்கியுள்ளார்.

பொறுத்துப் பார்த்த காண்ட்ராக்ட்டர் சஞ்சய் பிரதான், தன்னிடம் ரூ. 43 லட்சத்தை சங்கீத் சோம் லஞ்சமாக பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டதாக காவல்துறையில் தற்போது புகார்அளித்துள்ளார்.

லஞ்சப் பணம் மூன்றுதவணைகளாக எப்போது, எங்கு வைத்து, யாரிடம் கொடுக்கப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை சஞ்சய்பிரதான் தனது புகாரில் தெரிவித்துள் ளார். இது உத்தரப்பிரதேசத்தில் புதியபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர்  ஆதித்யநாத்தின் முதன்மைச் செயலாளர் கோயல், தன்னிடம்ரூ. 25 லட்சம் லஞ்சம் கேட்டதாக, அபிஷேக் குப்தா என்ற ஒரு தொழிலதிபர் சில நாட்களுக்கு முன்புதான் பரபரப்பு கிளப்பியிருந்தார். பின்னர் ஒருவழியாக அவரை ஆதித்யநாத் அரசு மிரட்டிப்பணிய வைத்தது. இப்போது, சஞ்சய் பிரதான் லஞ்சப் புகார் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' 10 கேள்விகள்.. அடுத்த விசாரணை எப்போது?
அன்பில் மகேஷ் குக்கர்..! கே.என்.நேரு சாமான் செட்..! திமுகவின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!