திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுகவினர் 8 பேர் அதிரடி நீக்கம்.. ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..!

Published : Oct 03, 2021, 02:19 PM ISTUpdated : Oct 03, 2021, 03:24 PM IST
திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுகவினர் 8 பேர் அதிரடி நீக்கம்.. ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..!

சுருக்கம்

ராணிப்பேட்டை ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பணியாற்றியதாக 8 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர். 

ராணிப்பேட்டை ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பணியாற்றியதாக 8 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கழகத்தின் கொள்ளை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின்  கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கழக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிடுதல் மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றுகின்ற காரணத்தினாலும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாபு, பாஸ்கரன், சையத்கான், வெங்கடேசன், பாண்டியன், கஜேந்திரன், வெங்கடேசன், அசோக்குமார் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!