அங்கிருப்பது பாகிஸ்தானில் இருப்பது போல இருக்கும்.. அப்பாவுக்கு 10 லட்சம் கடன்.. உடைத்து பேசிய விஜய்சேதுபதி.

By Ezhilarasan BabuFirst Published Oct 3, 2021, 1:24 PM IST
Highlights

இந்நிலையில் திரைப்பட சம்மேளனத் தலைவர் ஆர்.கே செல்வமணி அவர்களின் முயற்சியில், சங்க உறுப்பினர்களுக்கு குடியிருப்பு அமைக்கவும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. 

நான் சினிமாவுக்கு வந்ததற்கு காரணம் என் அப்பாவிற்கு 10 லட்சம் கடன் இருந்தது தான் காரணம் என விஜய் சேதுபதி மேடையில்  மனம் திறந்து பேசியுள்ளார். அவரின் பேச்சு அங்கிருந்த பலரையும்  நெகிழ்ச்சியடைய வைத்தது. நடிகர் விஜய் சேதுபதி தனது நடிப்பால் பலரையும் கவர்ந்து வருகிறார். பெரும்பாலும் குடும்பப் பெண்கள் இளைஞர்கள் அதிக அளவில் ரசிக்கும் கதாநாயகனாகவும் அவர் வலம் வருகிறார். இந்நிலையில் திரைப்பட தொழிலாளர்களுக்கு குடியிருப்பு அமைக்க நடிகர் விஜய்சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பனையூரில் ஓர் ஏக்கர் நிலம் திரைப்பட தொழிலாளர்களுக்கு குடியிருப்பு கட்ட வழங்கினார். 

இந்நிலையில் திரைப்பட சம்மேளனத் தலைவர் ஆர்.கே செல்வமணி அவர்களின் முயற்சியில், சங்க உறுப்பினர்களுக்கு குடியிருப்பு அமைக்கவும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. தயாரிப்பாளர்  தாணு, நடிகர் கே.பாக்யராஜ், பெப்ஸி தலைவர் செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் பலரும் விஜயசேதுபதியின் நன்கொடையை பாராட்டிப் பேசினர்.அதில் பேசிய விஜய் சேதுபதி, தொழிலாளர்களைப் பற்றி ஆர்.கே செல்வமணி யோசிக்கிறார், அவர் பெப்சிக்கு சரியான தலைவர்தான் என்றார். இரண்டு விளம்பர படங்களில் நடித்தேன், அதில் வந்த பணத்தை உடனே கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன், தொழிலாளர்களுக்கு குடியிருப்பு கட்ட மொத்தம் 800 கோடி ஆகும் என்றார்கள், அதில் இது ஒரு சிறு துளி தான், இதோடு நிறுத்தி விடப்போவதில்லை என்னால் முடிந்ததை செய்வேன் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நான் சினிமாவிற்கு வந்ததற்கு காரணம் என் அப்பாவுக்கு 10 லட்சம் கடன் இருந்ததுதான், துபாய்க்கு போய் சம்பாதித்தேன், ஆனால் 20ஆம் தேதி ஆனால் வாடகையை நினைத்து பயமாக இருக்கும், எதுவும் தெரியாமல் இப்படி வளர்ந்து விட்டேன், சினிமாவில் ஆசை கனவெல்லாம் கிடையாது, வாடகை வீட்டில் இருப்பது பாகிஸ்தானில் குடியிருப்பது போல இருக்கும், இன்னும் 10 லட்சம் பணத்தை அலுவலகத்திற்கு சென்றவுடன் தருகிறேன் என அவர் மேடையில் பேசினார். கட்டிடத்தை கட்டும்போது அதை உறுதியாக கட்டுங்கள் என பில்டிங் காட்டிக்கொடுக்கும் நிறுவன தலைவருக்கு தமிழ் தெரியாது என்பதால் அதை ஆங்கிலத்தில் சொன்ன விஜய் சேதுபதி, பின்னர் இந்தியிலும் கூறினார். அப்போது அங்கிருந்தவர்கள் கைதட்டி அதை வரவேற்றனர்.
 

click me!