மக்களே எச்சரிக்கை.. நாளொன்றுக்கு 20 பேர் பாதிப்பு.. 2919 பேர் மருத்துவமனையில் அனுமதி. வேகமாக பரவும் டெங்கு..?

By Ezhilarasan BabuFirst Published Oct 3, 2021, 12:37 PM IST
Highlights

அந்த வரிசையில் தமிழகம் முழுவதும் நான்காம் கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அதை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகத்திலுள்ள மரபணு பகுப்பாய்வு  கூடத்தில் இதுவரை மேற்கொண்ட ஆய்வில் டெல்டாவகை கொரோனா வைரஸ் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது என்றும், வேறு வகை வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தற்போது டெங்கு பாதிப்புக்கு நாளொன்றுக்கு 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகள் பெறப்பட்டு, அது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. 

அந்த வரிசையில் தமிழகம் முழுவதும் நான்காம் கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அதை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மூன்றாம் கட்ட தடுப்பூசி சிறப்பு முகாம் நல்ல வெற்றியைத் தந்தது. தற்போது மேற்கு மாவட்டங்களில் தொற்று குறைவதற்கான அறிகுறி தென்படத் தொடங்கியுள்ளது, தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா இறப்பில் 90 விழுக்காடு தடுப்பூசி செலுத்தாதவர்கள்தான் என கண்டறியப்பட்டுள்ளது, 3.11 லட்சமாக இருந்த சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை, தற்போது 17 ஆயிரமாக குறைந்துள்ளது. மரபணு பகுப்பாய்வு கூடத்தில் இதுவரை மேற்கொண்ட ஆய்வில் டெல்டா வகை கொரோனா வைரஸ் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. 

வேறு புதிய வகை வைரஸ் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை, மரபணு பரிசோதனை கூடம் தொடங்கிய பிறகு வந்த 20 மாதிரியும் டெல்டாவகையாகவே இருந்தது. கொரோனாவுடன் சேர்ந்து, தற்போது டெங்கு பாதிப்பும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. நாள்தோறும் 20 பேர் வரை  டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2419 ஆக இருந்த டெங்கு பாதிப்பு, தற்போது 2919 ஆக உள்ளது. பூச்சியியல் வல்லுநர்கள், கொசு குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். உத்தர பிரதேசத்தில் டெங்கு பெரும் பாதிப்பாக இருந்து வருகின்றது என அவர் கூறினார். இதுவரை தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
 

click me!