அந்த ஐயப்பன் மீது சத்தியமா சொல்றேன்.. ஒரு குண்டுமணி அளவுக்கு கூட முறைகேடு நடக்காது.. அடித்து கூறிய சேகர் பாபு.

Published : Oct 03, 2021, 12:01 PM IST
அந்த ஐயப்பன் மீது சத்தியமா சொல்றேன்.. ஒரு குண்டுமணி அளவுக்கு கூட முறைகேடு நடக்காது.. அடித்து கூறிய சேகர் பாபு.

சுருக்கம்

அந்தவகையில் கோயிலில் உள்ள நகைகளை உருக்கி அதை வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வருமானத்தை கோயில் திருப்பணிக்கு பயன்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலைத்துறை அறிவித்துள்ளது. 

இந்துக் கோயில்களில் பழைய நகைகளை உருக்கும்போது ஒரு குண்டுமணி அளவில் கூட முறைகேடு நடைபெறாது என்றும், ஐயப்பன் மீது ஆணையாக இதில் எந்த தவறும் நடக்காது அனைத்தும் வெளிப்படைத் தன்மையோடு நடைபெறும் என்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் முதல், பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. திமுக அரசின் மக்கள் நல திட்டங்கள் பெருமளவில் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. 

அந்தவகையில் கோயிலில் உள்ள நகைகளை உருக்கி அதை வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வருமானத்தை கோயில் திருப்பணிக்கு பயன்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலைத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் அக்-5 ஆம் தேதி,மறைந்த ராமலிங்க அடிகளாரின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள அவர் வாழ்ந்த இல்லத்தை முதல் முறையாக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு பார்வையிட்டார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, இராமலிங்க அடிகளார் மனித கடவுளாக போற்றப்படுகிறார். அவரின் பிறந்தநாளில் அவர் வாழ்ந்த வீட்டை பார்வையிட்டு வருமாறு முதல்வர் இட்ட உத்தரவின் பேரில் தான் இங்கு வந்தேன் என்றார். 

இதுவரை எந்த ஒரு இந்து அறநிலைத் துறை அமைச்சரும் இந்த வீட்டை ஆய்வு செய்வதில்லை, தற்போது ராமலிங்க அடிகளார் வாழ்ந்த இல்லம் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல வடலூரில் 72 ஏக்கர் நிலப்பரப்பில் வள்ளலாரின் மணிமண்டபம் அமைக்க வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் இல்லாத கோயில் நகைகளை உருக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த நகைகளில் இருந்து ஒரு குண்டுமணி அளவில் கூட முறைகேடு நடக்காது, இது ஐயப்பன் மீது ஆணை. அனைத்தும் வெளிப்படையாக நடக்கும், ஏற்கனவே திருச்சி சமயபுரம் கோவிலில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது என்றார். 

 

PREV
click me!

Recommended Stories

மோடிக்காக காரை ஓட்டிய முஹமது நபியின் 42 வது நேரடி தலைமுறை ஜோர்டான் இளவரசர்..!
EVM எந்திரம் பிராடு இல்லை..! நான் 4 முறை வெற்றிபெற்றுள்ளேன்.. காங்கிரஸ் எம்.பி., சுப்பிரியா சுலே ஆதரவு