அதிர வைத்த ஐடி ரெய்டு !! அமைச்சரின் உதவியாளர் வீட்டில் 75 லட்சத்தை அள்ளிய அதிகாரிகள் !!

Published : Feb 22, 2019, 07:56 AM IST
அதிர வைத்த ஐடி ரெய்டு !! அமைச்சரின் உதவியாளர் வீட்டில் 75 லட்சத்தை அள்ளிய அதிகாரிகள் !!

சுருக்கம்

அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபம்  மற்றும் அவரது அரசியல் உதவியாளர் வீடுகளில் நடைபெற்ற வருமான வரி சோதனையில், கணக்கில் வராத 75 லட்சம் ரூபாயை, அமைச்சரின் உதவியாளர் விட்டில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து நாட்டறம்பள்ளி செல்லும் மெயின் ரோட்டில் பார்த்தசாரதி தெருவில் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. 

இங்கு  திடீரென 2 கார்களில் வருமானவரி துறையினர் வந்தனர். பின்னர் அதிகாரிகள் மண்டபத்தின் கதவுகளை மூடிவிட்டு அங்கு சோதனை மேற்கொண்டனர். அதேபோல், ஜோலார்பேட்டையில் உள்ள திருமண மண்டப மேலாளர் சத்தியமூர்த்தி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். 

இதில் சீனுவாசன் வீட்டில் இருந்து 75 லட்ச ரூபாய் ரொக்கமும், வீரமணியின் வீட்டில் இருந்து சில ஆவணங்கள் மற்றும் சத்தியமூர்த்தி என்பவரின் ஓட்டு வீட்டில் இருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை வருமான வரித்துறை அதிகாரிகள் இதுவரை உறுதி செய்யவில்லை.

இந்த சோதனை காலை 9 மணி முதல் தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெற்றது. இதற்காக டெல்லியில் இருந்து 11 அதிகாரிகளும், சென்னையில் இருந்து 9 அதிகாரிகளும் 5 கார்களில் வந்திருந்தனர். 

இந்த ஐடி ரெய்டு அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் , கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது

PREV
click me!

Recommended Stories

ஆட்சியில் பங்கு வேண்டும்.. கனிமொழியிடம் நேரடியாக கேட்ட ராகுல் காந்தி.. வெளியான தகவல்!
விசிக கொடியை நட்டுட்டோம்.. இந்த இடம் எங்களுக்குத்தான்.. சிறுத்தைகள் அட்டூழியம்..!