அதிரடி அதிமுக !! தேமுதிகவை வளைத்துப் போட்ட எடப்பாடி !! எப்படி தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Feb 22, 2019, 6:29 AM IST
Highlights

தொகுதி ஓதுக்கீட்டில் கடுமையான இழுபறி நீடித்த நிலையில் அதிமுக – தேமுதிக  கூட்டணி பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக மற்றும் அதிமுக தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைந்துள்ளது.

அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் பாஜக, பாமக, என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. தேமுதிக 8 தொகுதிகள் வரை கேட்டதால் பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்தது.

ஏற்கனவே அ.தி.மு.க., கூட்டணியில், தேமுதிக  இணைய சம்மதம் தெரிவித்திருந்தது. பா.ஜ., - தேமுதிக கட்சிகளுக்கு, எத்தனை தொகுதிகள் என்பதை முடிவு செய்வதற்கு முன்னரே, பாமகவுக்கு, ஏழு லோக்சபா மற்றும் ஒரு ராஜ்யசபா பதவியை, அதிமுக ஒதுக்கியது. அதன்பின், தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகளை ஒதுக்க முன்வந்தது. இதை, தேமுதிக ஏற்கவில்லை.

பாமகவுக்கு வட மாவட்டங்களில் மட்டுமே, செல்வாக்கு உள்ளது. எங்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும், தனி ஓட்டு வங்கி உள்ளது. எனவே, பாமகவை விட, கூடுதல் தொகுதிகள் வேண்டும்' என,வலியுறுத்தியது. இதனால், அதிமுக கூட்டணியில், தேமுதிக இணைவதில் இழுபறி ஏற்பட்டது. 

இந்நிலையில் தான் நேற்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்இ விஜயகாந்திதை சந்தித்துப் பேசினார். கூட்டணி தொடர்பாக அவர் பேசியதாகவும் தகவல் வெளியானது.

இதனால் பதறிப்போன அதிமுக நேற்று மாலை, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரை அனுப்பி , தேமுதிக தலைமையுடன் பேச்சு நடத்தியது. அந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி தேமுதிகவிற்கு, ஐந்து தொகுதிகள் ஒதுக்குவதாக தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் தேமுதிக ., தரப்பில், 'ஐந்து என்றால், நாங்கள் கேட்கும் தொகுதிகளையே தர வேண்டும்' என்று, நிபந்தனை விதித்துள்ளனர். அதற்கு அமைச்சர்கள், கட்சி தலைமையிடம் பேசிய பின், பதில் அளிப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து இன்று  அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

click me!