அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் !! அப்ப அந்த தொகுதி பாமகவுக்கு இல்லையா ?

By Selvanayagam PFirst Published Feb 21, 2019, 8:09 PM IST
Highlights

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது என்.ஆர்காங்கிரஸ் இணைந்துள்ளது. அந்த கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த தொகுதியை பாமக கேட்டிருந்த நிலையில் தற்போது என்-ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஓர் கூட்டணியும், திமுக தலைமையில் ஓர் கூட்டணியும் உருவாகியுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடது சாரிகள், மதிமுக. , விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி போன்றவை இடம் பெற்றுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

இதே போல் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கிப்பட்டுள்ள நிலையில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன்  பேச்சு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் இருவரையும் சந்தித்து தொகுதி ஒதுக்கீடு குறித்து பேசினார்.

அப்போது என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி  தொகுதியை ஒதுக்கீடு செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஏற்கனவே புதுச்சேரி தொகுதியை பாமக கேட்டிருந்த நிலையில்  தற்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.   

click me!