5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வா..? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்..!

By vinoth kumarFirst Published Feb 21, 2019, 6:09 PM IST
Highlights

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டில் பொதுத்தேர்வு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டில் பொதுத்தேர்வு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு, தற்போது மத்திய அரசின் முடிவை ஏற்று, அதற்கான பணியைத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை  அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டே பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையம் அருகே துணைமின் நிலையம் கட்டுமான பணிக்கு அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் பொதுத்தேர்வு குறித்து துறை ரீதியான பணிகள் நடந்து வருவதாகவும், இது தொடர்பாக அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என தெரிவித்தார். மேலும் இந்த வருடம் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு இல்லை எனவும் தெரிவித்தார். இதனால் மாணவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

click me!