7 மக்களவைத் தொகுதிகளுக்கு விரைவில் இடைதேர்தல்... பா.ஜ.க எதிர்ப்பு அலை வேலைசெய்யுமா?

 
Published : Oct 16, 2017, 03:51 PM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
7 மக்களவைத் தொகுதிகளுக்கு விரைவில் இடைதேர்தல்... பா.ஜ.க எதிர்ப்பு அலை வேலைசெய்யுமா?

சுருக்கம்

7 Lok Sabha by elections soon

பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தல் நடத்தி முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காலியாக இருக்கும் 7 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைதேர்தல் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஆனந்த்காக்  தொகுதி எம்.பி. முப்தி முகமது சயீத், பா.ஜனதா தலைவர்கள் சன்வர் லால் ஜாட்(அஜ்மீர்), மகந்த் சாந்த் நாத்(ஆல்வார்), திரிணாமுல் காங்கரிஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி சுல்தான் அகமது (உல்பேரியா, மே.வங்காளம்), ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் முகம்மது(அராரியா தொகுதி, பீகார்) ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் இறந்ததால், இந்த தொகுதிகள் காலியாக உள்ளன.

மேலும், உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதியின் எம்.பி.யாக இருந்த முதல்வர் ஆதித்யநாத் தனது பதவியை ராஜினாமா செய்தார், அதேபோல, புல்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற துணை முதல்வவ் கேசவ் பிரசாத் மவுரியாவும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த இரு தொகுதிகளும் காலியாக உள்ளன. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஆனந்த்காக் தொகுதியில் கடந்த மே 25-ந்தேதி இடைத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்கான தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

தீவிரவாத செயல்கள், தீவிரவாதிகளின் தாக்குதல் காரணமாக தேர்தலை தள்ளி வைக்கக் கோரி, ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள கட்சிகளும், ஆளும் அரசும் கேட்டுக்கொண்டதையடுத்து,தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தாமல் இருக்கிறது. இதற்கிடையே நவம்பர் 15-ந்ேததிக்குள் ஆனந்த்காக் தொகுதியில் தேர்தல் நடத்தி முடிக்கும் சூழல் இருக்கிறதா எனக் கேட்டு தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. 

இதற்கிடையே இமாச்சலப்பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் வரும் நவம்பர் 9-ந்தேதி நடக்க உள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் தேர்தல் ஆணையம் மிகவும் பரபரப்பாக இயங்கத் தொடங்கிவிடும். இந்த மாநிலத் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 18-ந்தேதி வெளியிடப்பட உள்ளன. மேலும், குஜராத் சட்டசபைத் தேர்தலும் டிசம்பர் மாதம் நடத்தி முடிக்கப்பட வேண்டு்ம என்பதால், தேர்தல் ஆணையம் பரபரப்பாக இயங்கி வருகிறது.

இந்த இருமாநிலத் தேர்தல்கள் நடத்தும் போது, 7 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிரமாக இருக்கிறது. 

கேரள மாநிலம் வெங்காரா சட்டசபைத் தொகுதி, குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோகவெற்றி பெற்றது. பா.ஜனதா அரசு கொண்டு வந்த ரூபாய் நோட்டுதடை, ஜி.எஸ்.டி. வரிக்கு மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி தேடித் தந்தது. இந்த 7 தொகுதிகளில் நடக்கும் இடைத் தேர்தலில் வெற்றி பெறும் கட்சி அடுத்த தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும். 

PREV
click me!

Recommended Stories

எம்ஜிஆர், ஜெ. காலத்தில் இருந்த வரவேற்பு.. TVKவில் மனமகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.. செங்கோட்டையன் ஓபன் டாக்
ஜனவரியில் அதிர்ச்சி..! தவெக மற்றொரு அதிமுகவாக மாறும்..! இனிமேல் அதிமுக கிடையாது..! செங்கோட்டையன் சூளுரை..!