வேதனையுடன் கலங்கி டிடிவி.தினகரன் வெளியிட்ட இரங்கல் செய்தி.. கையோடு அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை..!

Published : Jun 06, 2022, 01:23 PM IST
வேதனையுடன் கலங்கி டிடிவி.தினகரன் வெளியிட்ட இரங்கல் செய்தி.. கையோடு அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை..!

சுருக்கம்

கடலூர் மாவட்டம் ஏ. குச்சிபாளையம், கீழ் அருங்குணம் பகுதியில்  கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவிகள் உள்ளிட்ட 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த துயர சம்பவத்தை அறிந்து வேதனை அடைந்தேன். 

கடலூரில் ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவிகள் உள்பட 7 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தை அறிந்து வேதனை அடைந்தேன் என டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகில் உள்ளது கீழ்அருங்குணம் கிராமம். இங்குள்ள கெடிலம் ஆற்றில் மழை காலத்தில் நீர் வரத்து இருப்பதும், அதன் பின் வறண்டு காணப்படுவதும் உண்டு. ஆனாலும் தடுப்பணை பகுதியில் தண்ணீர் தேங்கியிருக்கும். அண்மையில் பெய்த மழையால் ஆற்றின் தடுப்பணைக்கு அருகில் அதிகப்படியாக நீர் தேங்கியுள்ளது.

இதையறிந்த அப்பகுதியில் உள்ள ஏ.குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த முத்துராம் மகள் சுமிதா(18), குணால் மனைவி பிரியா(19), அமர்நாத் மகள் மோனிகா(16), சங்கர் மகள் சங்கவி(18), முத்துராம் மகள் நவநீதம்(20), அயன் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த ராஜகுரு மகள் பிரியதர்ஷினி(15) அவரது தங்கை திவ்யதர்ஷினி(10) ஆகியோர் நேற்று கீழ்அருங்குணம் கிராமப் பகுதி ஆற்றில் குளிக்கச் சென்றனர். ஆற்றில் தேங்கியிருந்த நீரில் இறங்கி குளித்தபோது, எதிர்பாரத விதமாக 4 சிறுமிகள் உள்ளிட்ட 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவத்ததிற்கு பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்த நிலையில் டிடிவி.தினகரனும் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கடலூர் மாவட்டம் ஏ. குச்சிபாளையம், கீழ் அருங்குணம் பகுதியில்  கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவிகள் உள்ளிட்ட 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த துயர சம்பவத்தை அறிந்து வேதனை அடைந்தேன். 

பலியானோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி, இத்தகைய துயர சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!