அண்ணாமலை... எங்களுக்கு ஆட்சி முக்கியம் இல்ல.. தன்மானம்தான்.. உன்ன ஒழிச்சிபுடுவோம்.. அலறவிட்ட அமைச்சர்.

By Ezhilarasan BabuFirst Published Jun 6, 2022, 1:01 PM IST
Highlights

அண்ணாமலை எங்களுக்கு ஆட்சி முக்கியமில்லை தன்மானம்தான் முக்கியம் என  அமைச்சர் தா.மோ அன்பரசன் கூறியுள்ளார். ஓவரா வாலாட்டினால் ஒட்ட நறுக்கி விடுவோம், ஒழித்து விடுவோம் ஜாக்கிரதை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரிக்கும் வகையில் அவர் பேசியுள்ளார்.  

அண்ணாமலை எங்களுக்கு ஆட்சி முக்கியமில்லை தன்மானம்தான் முக்கியம் என  அமைச்சர் தா.மோ அன்பரசன் கூறியுள்ளார். ஓவரா வாலாட்டினால் ஒட்ட நறுக்கி விடுவோம், ஒழித்து விடுவோம் ஜாக்கிரதை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரிக்கும் வகையில் அவர் பேசியுள்ளார். இதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அத்திட்டங்களை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வரவேற்று வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சியான அதிமுக,பாஜக திமுக அரசின் திட்டங்களை கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதிமுகவே பிரதான எதிர்கட்சி என்றாலும்  பாஜகவே உண்மையான எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை கட்டமைக்கும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முதல்வர் மற்றும்  அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இது ஒருபுறம் இருந்து வரும் நிலையில், பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது தமிழகத்தில் பலராஙும் வரவேற்று பாராட்டப்ப படுகிறது. ஆனால் பாஜகவினர் அதை கடுமையாக வசித்து வருகின்றனர்.

மாநில உரிமைகளை முன் வைக்கிறோம் என்ற பெயரில் பிரதமரிடம் இப்படித்தான் பொதுமேடையில் கணக்குப்பிள்ளை போல நடந்து கொள்வதா என முதல்வர் ஸ்டாலினை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து வருகிறார். அண்ணாமலையின் விமர்சனத்திற்கு திமுக அமைச்சர்கள் கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அடுத்த புறநகரில் கலைஞரின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் அன்பரசன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார். கல்பாக்கத்தில் இருக்கிற அனல்மின் நிலையத்தில் ஒரு தமிழனுக்கு கூட வேலை கிடையாது  எல்லோரும் டில்லியிலிருந்து வடமாநிலத்தில் இருந்தும் வந்து இங்கு வேலை பார்க்கிறார்கள். முதலில் அதை மாற்றுங்கள் அண்ணாமலை, அண்ணாமலைக்கு துணிவிருந்தால் முதலில் மோடியிடம் போய் மேகதாது அணையை கட்டுவமை தடுத்து நிறுத்துங்கள்.

கண்ட பொறுக்கிகள் எல்லாம் திமுகவின் ஆட்சியைப் பற்றிய பேசிக்கொண்டிருக்கிறார்கள், நான் கேட்கிறேன் உங்களுக்கு எல்லாம் என்ன யோக்கியதை இருக்கிறது திமுகவைப் பற்றி பேசுவதற்கு, பிரதமர் என்ற முறையில் முதல்வர் மாநில உரிமைகளை அவரிடம் மேடையில் எடுத்து கூறினார், அதில் என்ன தவறு இருக்கிறது?  எபிஎஸ் ஆகி ரவுடிகளை பிடித்து ஜெயிலில் போடுவதற்கு பதிலாக அண்ணாமலை ரவுடிகளை பாஜகவில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். திமுக எல்லோரையும் எல்லா சூழ்நிலையிலும் பார்த்துவிட்டது, எனவே திமுகவிடம் உங்கள் உருட்டல் மிரட்டல் வேலைகளெல்லாம் எடுபடாது, எப்படியாவது தமிழகத்தில் எதிர்க்கட்சியாக வேண்டுமென பாஜக முயற்சி செய்கிறது நான் ஒன்று சொல்கிறேன் நீங்கள் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் உங்கள் வேலையை காட்டுங்கள் தமிழ்நாட்டில் அது எடுபடாது. 

அதிமுகவினர் சூடு சொரணை அற்றவர்கள்,அதிமுகவினர் அதிக கொள்ளையடித்துள்ளனர் அதனால் அவர்கள் வாய் திறந்து பேச முடியாத நிலையில் உள்ளனர். அண்ணாமலை தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது, ஆனால் ஆட்டோவில் ஏறி ஓடி விட்டார், இவர்களை ஒரே ஒரு வாரம் தூக்கி உள்ளே போட்டால் காட்சி வேண்டாம் என்று ஓடி விடுவார்கள். நான் பாஜகவுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன் ரொம்ப ஆட்டம் போட்டீர்கள் என்றால் வாலை ஒட்ட நறுக்கி சுண்ணாம்பு வைத்துவிடுவோம். எங்களுக்கு ஆட்சி முக்கியம் இல்லை தன்மானம் தான் முக்கியம். தொலைத்து விடுவேன் உங்களை ஜாக்கிரதை. இவ்வாறு அவர் பேசினார்.
 

click me!