அதிமுகவில் இருந்து 7 பேர் நீக்கம்... கட்சி தலைமை அதிரடி அறிவிப்பு!!

By Narendran S  |  First Published Mar 14, 2022, 8:22 PM IST

கடலூர் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உட்பட 7 பேரை நீக்கம் செய்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 


கடலூர் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உட்பட 7 பேரை நீக்கம் செய்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதுக்குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடலூர் மேற்கு மாவட்டம் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம் கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,

Tap to resize

Latest Videos

undefined

கடலூர் மேற்கு மாவட்டம், கழகத்தைச் சேர்ந்த கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து, திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தினாலும், S.வெங்கடேசன் ( கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு 1 - ஆவது வார்டு உறுப்பினர் ) S.பழனிவேல் ( கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு 4 - ஆவது வார்டு உறுப்பினர் ), S.ரபேக்கா ( க / பெ . சரவணன் ) ( கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு 10 - ஆவது வார்டு உறுப்பினர் )

S. சரவணன் ( த / பெ . சிகாமணி கோட்டகம், கம்மாபுரம் வடக்கு ஒன்றியம் ), N.செல்வராணி ( கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு 11 - ஆவது வார்டு உறுப்பினர் ),  N.ராஜ்குமார் ( தா / பெ . செல்வராணி , பழைய நெய்வேலி , கம்மாபுரம் வடக்கு ஒன்றியம் ), N.ராஜேஷ் ( தா / பெ . செல்வராணி , நெய்வேலி தெற்கு கிளைக் கழகச் செயலாளர் , கம்மாபுரம் வடக்கு ஒன்றியம் ) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!