BREAKING 7 சாதியினர் இனி தேவேந்திர குல வேளாளர்... பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Feb 14, 2021, 1:23 PM IST
Highlights

7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்கள் தேவேந்திர குல வேளாளர் என இனி அழைக்கப்படுவர் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்கள் தேவேந்திர குல வேளாளர் என இனி அழைக்கப்படுவர் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் தற்போது தாழ்த்தப்பட்டவர்களின் பட்டியலில் தனித்தனியாக உள்ள தேவேந்திர குலத்தான், கல்லாடி, பள்ளர், குடும்பன், கடையான், பண்ணாடி, வத்திரியன் உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை இணைத்து, ‘தேவேந்திர குல வேளாளர்’ என ஒரே பெயரில் அழைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்கள்  நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், தேவேந்திர குல வேளாளர் பிரிவை பட்டிலினத்தில் இருந்து விடுவித்து, தனிப் பிரிவாக வகைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பரிந்துரைக்க, தமிழக அரசு ஆய்வுக் குழு ஒன்றை அமைத்தது. அக்குழு பரிந்துரையின் பேரில், 7 உட்பிரிவுகளும் ஒரே பிரிவாக மாற்றப்பட்டாலும் பட்டியலினத்தில் தொடரும் என்றும், அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகை எப்போதும் போல் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இது தொடர்பாக மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. இது தொடர்பான மசோதா மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்கள் தேவேந்திர குல வேளாளர் என இனி அழைக்கப்படுவர் என பிரதமர் மோடி அதிரடி சரவெடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேவேந்திர குல வேளாளர் சகோதர, சகோதரிகள் பாரம்பரிய பெயரால் அழைக்கப்படுவர். 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர்கள் என அழைக்கும் அரசியல் சாசன திருத்தம் நிறைவேற்றப்படும். தேவேந்திர குல வேளாளர் அறிவிப்புக்கு உதவியாக இருந்த தமிழக அரசுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். 

தேவேந்திர குல வேளாளர் எனும் அறிவிப்பு வெறும் பெயர் மாற்றம் அல்ல. பெயர் மாற்றம் மூலம் 7 உட்பிரிவினருக்கு மதிப்பு மற்றம் வாய்ப்பை மத்திய அரசு உருவாக்கி கொடுத்துள்ளது. நல்லிணக்கம், நேசம், சகோதரத்துவத்தை கொண்டாடுபவர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள் என பிரதமர் மோடி பேசியுள்ளார். 

click me!