ஆரம்பமே அமர்களம்... தமிழில் வணக்கம் சொல்லி.. விவசாயிகளை பாராட்டிய பிரதமர் மோடி..!

By vinoth kumarFirst Published Feb 14, 2021, 12:59 PM IST
Highlights

சென்னை மக்கள் எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இனிய வரவேற்பு அளித்த மக்கள் அனைவருக்கும் நன்றிகள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

சென்னை மக்கள் எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இனிய வரவேற்பு அளித்த மக்கள் அனைவருக்கும் நன்றிகள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனையடுத்து, முதலில் வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு என தமிழில் பேசிய உரையை தொடங்கினார். தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள புதிய முக்கிய கட்டமைப்பு திட்டங்கள் தமிழக வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும். சென்னையில் இருந்து முக்கியமான கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி உள்ளோம். 636 கிலோ மீட்டர் தூரம் கல்லணை புதுபிக்க இருப்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கல்லணை கல்வாய் சீரமைப்பால் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மிகவும் பயனடையும். 

நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கி தானிய உற்பத்தியில் சாதனை புரிந்துள்ளது தமிழ்நாடு. வேளாண் உற்பத்தியில் சாதனை படைத்த தமிழக விவசாயிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், நீர் ஆதாரங்களை தமிழக விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர். 

வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான் என என்ற அவ்வையார் பாடலை பிரதமர் மோடி மேற்கொள்காட்டி பேசி வருகிறார். 

click me!