
சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்து, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த விழாவில், திட்டங்களை தொடங்கிவைத்து பேசிய பிரதமர் மோடி, தேவையான இடங்களில் தமிழ் கவிஞர்களின் பாடல்களை மேற்கோள் காட்டி பேசினார்.
டெல்டா மாவட்டத்தில் 2.27 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்திற்கு நீர்ப்பாசனத்தை ஏற்படுத்தும் கல்லணை கால்வாய் சீரமைப்பு மற்றும் புதுப்பித்தல் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, அந்த திட்டத்தின் பயன்பாடு குறித்து பேசும்போது, ஒளவையாரின், வரப்புயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும்; நெல் உயர குடி உயரும்; குடி உயர கோல் உயரும்; கோல் உயர கோன் உயர்வான் என்ற பாடலை மேற்கோள் காட்டினார்.
ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம்; ஆலைகள் வைப்போம், கல்விச்சாலைகள் வைப்போம் என்ற மகாகவி பாரதியின் பாடலையும் மேற்கோள்காட்டி பேசினார் பிரதமர் மோடி.