6 ஆவது நாளாக விடாமல் தொடரும் விசாரணை !! கோடநாடு எஸ்டேட் மர்மம் என்ன ? வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி !!!

First Published Nov 14, 2017, 9:02 AM IST
Highlights
6th day raid in kodanadu estate


ஜெயா தொலைக்காட்சி , நமது எம்.ஜி.ஆர் அலுவலகம் மற்றும் சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் 5 நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற வருமான வரித்துறையினரின் நடத்தி வந்த சோதனை நிறைவடைந்த நிலையில், கோடநாடு எஸ்டேட்டில் 6 ஆவது நாளாக இன்றும் சோதனை தொடர்கிறது.

சென்னை, தஞ்சை, மன்னார்குடி, நாமக்கல், திருச்சி, கோவை, கோடநாடு உள்ளிட்ட இடங்களிலும் வெளிமாநிலங்களில் சில இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

187 இடங்களில் 1800 அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கணக்கில் வராத தங்கம் மற்றும் வைர நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகம், அதன் தலைமை செயல் அதிகாரியும், சசிகலாவின் அண்ணன் மகனுமான விவேக்கின் மகாலிங்கபுரம் வீடு, அலுவலகம், அவரது சகோதரி கிருஷ்ணபிரியாவின் வீடு, சென்னையை அடுத்த படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை ஆகிய இடங்களில் நேற்று 5-வது நாளாக வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.



விவேக் வீட்டில் சோதனை நடத்திய போது, விவேக், அவருடைய மனைவி கீர்த்தனா மற்றும் மைத்துனர் பிரபு ஆகியோரை தனித்தனியாக அறையில் வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து சசிகலாவின் சகோதரர் திவாகரன் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இளவரசியின் மகன் விவேக்கிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 மணி நேரத்துக்கு மேலாக விசானை நடைபெற்றது.

ஜெயா டிவி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நேற்று நிறைவு பெற்ற நிலையில் கோடநாட்டில் உள்ள கர்சன் எஸ்டேட்டில் 6வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது.



அங்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் கைபற்றப்பட்ட நிலையில், இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

 

click me!