ஆரம்ப முதலே மந்த நிலையில் வாக்குப்பதிவு... 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 63.60% ஓட்டுப்பதிவு..!

By vinoth kumarFirst Published Apr 6, 2021, 6:53 PM IST
Highlights

தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. குறைந்தபட்சமாக நெல்லையில் 50.05 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. 

தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. குறைந்தபட்சமாக நெல்லையில் 50.05 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. 

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகம் முழுவதும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 70.79 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 50.05 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

 தமிழகத்தில் இதுவரை பெரிதாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எங்கும் இல்லை. இவிஎம் பிரச்சினை எங்கும் இல்லை. வாக்குப்பதிவு சுமுகமாக நடக்கிறது. எம்.பி. ரவீந்திரநாத் கார் மீது தாக்குதல் குறித்து புகார் வந்துள்ளது. மாவட்ட அலுவலரிடம் தகவல் கேட்டுள்ளோம். 

மாலை 6 மணிக்கு மேல் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தால் டோக்கன் அளித்து வாக்களிக்க வைப்போம். அதன் பின்னர் கடைசியில் கொரோனா பாதித்த வாக்காளர்களை வாக்களிக்க வைப்போம் என்றார்.

click me!