கடவுளின் பெயரால் 6 வயது குழந்தை நரபலி .. தூக்க தண்டனை கொடுக்க வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை.

Published : Feb 10, 2021, 10:20 AM ISTUpdated : Feb 10, 2021, 10:24 AM IST
கடவுளின் பெயரால் 6 வயது குழந்தை நரபலி .. தூக்க தண்டனை கொடுக்க வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை.

சுருக்கம்

கேரள மாநிலத்தில் ஆறு வயது மகனை கழுத்தை அறுத்து ஒரு பெண் கொலை செய்துள்ளார். அந்தப் பெண் கடவுளுக்காக தன் குழந்தையை பலி கொடுத்ததாக தகவல் சொல்லியுள்ளார்

கடவுளின் பெயரால் குழந்தையை கொன்ற  பெண்ணிற்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:  கேரள மாநிலத்தில் ஆறு வயது மகனை கழுத்தை அறுத்து ஒரு பெண் கொலை செய்துள்ளார்.

அந்தப் பெண் கடவுளுக்காக தன் குழந்தையை பலி கொடுத்ததாக தகவல் சொல்லியுள்ளார். இது மூடநம்பிக்கையின் உச்சகட்டமான ஒரு செயல். குழந்தையை கொன்ற அந்த பெண்ணிற்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும். மனிதர்கள் கடவுளுக்காக தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதை இஸ்லாம் எந்த காலத்திலும் அனுமதிப்பதில்லை. வணக்க வழிபாடு செய்வதாக இருந்தாலும் தங்களை தாங்களே வருத்திக் கொண்டு வணக்க வழிபாடு செய்வதை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தடை செய்திருக்கிறார்கள். 

முஹம்மது நபி(ஸல்) கீழ்கண்ட அனைத்தையும் தடை செய்துள்ளார்கள். அதாவது 1. நீண்ட நெடிய தூரம் கடவுளுக்காக நடந்து செல்வது.
 2. வெயிலில் நின்று தன்னைத்தானே வருத்திக் கொண்டு கடவுளுக்கு நேர்ச்சை செய்வது 3. இறைவனுக்காக ஒருவர் திருமணம் புரியாமல் துறவறம் இருப்பது. 4. இரவு நேரங்களில் முழுமையாக நின்று வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது. 5. இறைவனுக்காக காலம் முழுக்க நோன்பு வைக்கக் கூடியது. 

தன்னைத் தானே வருத்திக் கொள்வது, தன்னுயிரை கடவுளுக்காக அர்ப்பணிப்பது, பிற உயிர்களை கடவுளுக்கு நரபலி தருவது என்ற அனைத்தையும் இஸ்லாம் தடுத்துள்ளது. இது போன்ற மூட நம்பிக்கைகளை இஸ்லாம் எந்த ஒரு இடத்திலும் காட்டித் தரவில்லை. இது மிகப்பெரிய  மூடநம்பிக்கையின் வெளிப்பாடு என்பதை  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம். என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி