மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.
மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2019 டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கணக்கிட்டு, ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது. ஊதிய உயர்வால், 2019 முதல் 2022 மார்ச்.31 ஆம் தேதி வரை, தர வேண்டிய நிலுவை தொகை, இரண்டு தவணைகளாக வழங்க ப்படும், ஊதிய உயர்வால், 75,978 ஊழியர்கள் பயன்பெறுவர்.
இதையும் படிங்க: 2 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும்... விஏஓ கொலை வழக்கில் மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!!
undefined
இதனால், அரசுக்கு, 527 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இதுவரை, 18 முறை ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது 19 ஆவது முறையாக, பேச்சு வார்த்தை நடந்து முடிந்துள்ளது. பேச்சுவார்த்தையில் பங்கேற்ற, 19 தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகளும் ஏற்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராஜபாளையம் அருகே தவறி விழுந்து நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு - சோகத்தில் மூழ்கிய கிராமம்
முன்னதாக சென்னை, அண்ணா சாலை, மின்வாரிய அலுவலகம் ஆகிய இடங்களில் ஊதிய உயர்வு உள்ளி ட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத் தி கடந்த ஒரு மாதமாக, தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுடன் 18 முறை ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் 19வது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எடப்பட்டத்தை அடுத்து மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.