உக்ரைனில் படிப்பை பாதியில் கைவிட்ட தமிழக மாணவர்கள், தமிழக கல்லூரிகளில் சேருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் படிப்பை பாதியில் கைவிட்ட தமிழக மாணவர்கள், தமிழக கல்லூரிகளில் சேருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சூடான் நாட்டில் இருந்து தமிழர்கள் 270 பேரை தமிழக அரசு மீட்டு, அவர்களை தமிழகம் அழைத்து வந்துள்ளது. நேற்றிரவு கூட, மணிப்பூர் கலவரப்பகுதியில் இருந்து தமிழகத்தை சேர்ந்த 5 பேர் மீட்கப்பட்டு, அழைத்து வரப்பட்டார்கள்.
இதையும் படிங்க: ராஜபாளையம் அருகே தவறி விழுந்து நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு - சோகத்தில் மூழ்கிய கிராமம்
உக்ரைனில் படிப்பை பாதியில் கைவிட்ட தமிழக மாணவர்களுக்கு, தமிழக கல்லூரிகளில் சேருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில், மருத்துவம் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு, மத்திய அரசுடன் தொடர்ந்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திராவிட மொழியை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் எதிர்க்கிறார்.
இதையும் படிங்க: 2 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும்... விஏஓ கொலை வழக்கில் மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!!
ஆனால், அவரது பெயரிலேயே திராவிடம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். முன்னதாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா கல்விக் குழும உள்விளையாட்டு அரங்கத்தில், மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.