தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் !! அரசாணை வெளியிட்டது எடப்பாடி அரசு !!

Published : Nov 12, 2019, 08:58 PM IST
தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள்  !!  அரசாணை வெளியிட்டது எடப்பாடி அரசு !!

சுருக்கம்

தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  இதற்காக முதற்கட்டமாக தலா 100 கோடி ரூபாய் என 600 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி தொழில் நுட்ப மதிப்பீட்டுக் குழு கூட்டம் நடந்தது. இதில், நாடு முழுவதும் புதிதாக துவங்க உள்ள 31 மருத்துவ கல்லூரிகளின் பட்டியல் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. 

இதில் தமிழகத்திற்கு மட்டும் 6 கல்லூரிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொறு கல்லூரிக்கும் மத்திய அரசு சார்பில் ரூ.195 கோடியும், மாநில அரசு சார்பில் ரூ.130 கோடியும் ஒதுக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அமையவுள்ள புதிய மருத்துவ கல்லூரிகளுக்கான அரசாணை, இன்று வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக, 6 மருத்துவக்கல்லூரிகளுக்கும் தலா ரூ.100 கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மருத்துவக்கல்லூரிகள் திருப்பூர், நீலகிரி,  ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல்  மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் அமையவுள்ளன.

PREV
click me!

Recommended Stories

பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!
மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!