ஸ்டாலின் செய்த சாதனைகளை பட்டியலிட்ட அதிமுக அமைச்சர்..! அரசியல் அரங்கில் அதிரடி..!

By ezhil mozhiFirst Published Nov 12, 2019, 7:26 PM IST
Highlights

ஜனநாயகவாதியாக எப்பொழுதும் ஸ்டாலின் இருந்தது அல்ல சர்வாதிகாரியாக மட்டுமே இருந்து வந்துள்ளார். வயதில் மூத்தவர்கள் பெரியவர்கள் யாருக்கும் பதவி தராமல் உதயநிதி போன்ற இளைஞர்களுக்கு பதவி தருவது தான் ஸ்டாலினின் சாதனை. 

ஸ்டாலின் செய்த சாதனைகளை பட்டியலிட்ட அதிமுக அமைச்சர்..! அரசியல் அரங்கில் அதிரடி திருப்பம்..! 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான அரசின் சாதனையை விளக்கும் வண்ணமாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் தொடர் ஜோதி நடைபயணம் இன்று மதுரையில் நடைபெற்றது.

இதில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய திண்டுக்கல் சினிவாசன், உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றி பெற தயார் நிலையில் உள்ளோம் வெற்றியும் பெறுவோம் என்றார். 

ஜனநாயகவாதியாக எப்பொழுதும் ஸ்டாலின் இருந்தது அல்ல சர்வாதிகாரியாக மட்டுமே இருந்து வந்துள்ளார். வயதில் மூத்தவர்கள் பெரியவர்கள் யாருக்கும் பதவி தராமல் உதயநிதி போன்ற இளைஞர்களுக்கு பதவி தருவது தான் ஸ்டாலினின் சாதனை. 

படம் எடுக்கும்போது 150 நாட்கள் ஓட வேண்டும் என அப்போது நடிகர்கள் நினைப்பார்கள். ஆனால் இப்பொழுது முதலமைச்சர் என்னும் பதவியில் உட்கார வேண்டும் என நினைக்கிறார்கள்.

7 பேர் விடுதலையை பொறுத்தவரையில் தமிழக அரசினுடைய வேலை என்பது நிறைவு பெற்றுவிட்டது. தீர்மானம் நிறைவேற்றி விடுதலை செய்யுங்கள் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டோம். இனிமேல் கவர்னர் மற்றும் மத்திய அரசாங்கத்தின் கையில்தான் உள்ளது அவர்களின் விடுதலை

தினகரன், சசிகலா போன்றோரை எங்கள் கட்சியில் இணைக்க வேண்டும் என்ற அவசியமே எங்களுக்கு இல்லை.சசிகலாவை சேர்க்கப் போகிறோம் என்ற வதந்தியை எல்லாம் யாரும் நம்ப வேண்டாம்.

முதலமைச்சர் முன்பே சொல்லி இருந்தார். விளம்பரம் பண்ணக்கூடாது நீதிமன்றத்தின் தீர்ப்பை தலைவணங்கும் என்று சொல்லிவிட்டார். அதையும் மீறி வைத்தால் காவல்துறை தனது கடமையை செய்யும். அமைச்சரவை மாற்றம் ஆள்சேர்ப்பு என்பது முதலமைச்சர் கையில் உள்ளது. என் துறையின் மீது ஏதேனும் குற்றம் இருந்தால் உடனடியாக அதைச் சொல்லுகின்ற பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்

சட்டப்படி திமுகவில் தலைமைப் பொறுப்புக்கு அழகிரிதான் வரவேண்டும்.ஸ்டாலின் அண்ணனை ஓரங்கட்டிவிட்டு பதவிக்கு வந்துள்ளார்.நடிகர்கள் வயதான காரணத்தினால் தான் அரசியலுக்கு வருகிறார்கள்.

நடிகர் கமலஹாசன் 65-வது பிறந்தநாளை தற்சமயம் கொண்டாடி வருகிறார். நடிகர்கள் அரசியலுக்கு வருவது பதவி ஆசை பிடித்துதான் என அமைக்கர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

click me!