வெற்றிடம் அல்ல எடப்பாடி வெற்றிபெறும் இடம்..!! ரஜினியை வெளுத்துக் கட்டிய உதய்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 12, 2019, 6:31 PM IST
Highlights

ஜெயலலிதாவின் கணவு திட்டங்களை நிறைவேற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி .குடி மராமத்தின் பணி மூலமாக நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. காவல் துறையில் கட்ட பஞ்சாயத்து இப்போது இல்லை.வேலை இல்லாத சில பேர் வெற்றிடம் உள்ளது என்று சொல்லியுள்ளனர்.ஆனால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு இரண்டு இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ளோம்.வேலை இல்லாதவர்களுக்கு சொல்கிறேன். இது வெற்றிடம் அல்ல. முதலமைச்சர் வெற்றி கானும் இடம். 

வேலையே இல்லாதவர் சொல்கிறார் தமிகத்தில் வெற்றிடம் உள்ளது என்று. வேலை இல்லாதவருக்கு நான் சொல்கிறேன். தமிழகத்தில் இருப்பது வெற்றிடம் அல்ல எடப்பாடியரின் வெற்றி பெறும் இடம் என்று தமிழக அமைச்சர் ஆர்பி உதயகுமார் நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாக சாடியுள்ளார். 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான அரசின் சாதனையை விளக்கும் வண்ணமாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் தொடர் ஜோதி நடைபயணம் இன்று மதுரையில் நடைபெற்றது. இதில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், தமிழகத்தின் முதல் அமைச்சரும் துணை முதலமைச்சரும் வாய்ப்பு வழங்கினால் இந்தியாவின் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து வந்து ஜல்லிக்கட்டை நடத்துவோம்.

 

வீதி வீதியாக சென்று தெருத்தெருவாக  நடை பயணம் செல்வது எதற்காக? என்று சொன்னால், பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிற எதிர்கட்சிகளின் தோலுரித்துக் காட்டுவதற்காக மட்டுமே. இத்தொடர் என்பது ஏழரை கோடி ஏழை மக்களின் இல்லங்களில் ஒளியேற்ற  அமையும் என்பதில் மாற்றமில்லை. நம் அரசு செய்துள்ள அனைத்து சாதனைகளையும் ஒன்றும் இல்லை என்று சொல்லி பொய்யானக் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறது எதிர்க்கட்சி . சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் தமிழகம் தான் முதலிடம் .ஆகையால்தான் சீன அதிபரே இங்கே வந்து இரு நாட்டு தலைவர்களும் உரையாற்றினர். ஸ்டாலின் அவர்களே புரிந்து கொள்ளுங்கள் தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. உலகமே பாராட்டுகிறது.  ஜெயலலிதாவின் கணவு திட்டங்களை நிறைவேற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி . குடி மராமத்தின் பணி மூலமாக நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. 

காவல் துறையில் கட்ட பஞ்சாயத்து இப்போது இல்லை. வேலை இல்லாத சில பேர் வெற்றிடம் உள்ளது என்று சொல்லியுள்ளனர். ஆனால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு இரண்டு இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ளோம். வேலை இல்லாதவர்களுக்கு சொல்கிறேன். இது வெற்றிடம் அல்ல. முதலமைச்சர் வெற்றி கானும் இடம். தமிழகம் அத்தி வரதர் சுவாமியை வழிபட வந்த பல லட்சம் மக்களுக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தவர் முதலமைச்சர். ஊரை சுற்றி வருகிற பொய்யை அழிக்கத்தான் இந்த உண்மை உரைக்கும் தொடர் ஜோதி. வெளிநாடுகளுக்கு சென்று பல தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பல தொழில்களை இங்கே கொண்டு வந்து பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கினோம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.


 

click me!