விஜயகாந்த் நிலைமை உங்களுக்கு வரணுமா..? வேண்டாம் தலைவா... ரஜினியை நினைத்து கலங்கும் ரசிகர்கள்..!

Published : Nov 12, 2019, 05:31 PM IST
விஜயகாந்த் நிலைமை உங்களுக்கு வரணுமா..? வேண்டாம் தலைவா... ரஜினியை நினைத்து கலங்கும் ரசிகர்கள்..!

சுருக்கம்

யானையை கட்டி மேய்க்கிற வேலை. எக்கச்ச செலவு ஆகும். அரசியலுக்கு வந்து விஜய்காந்தை போல தலைவர் கடனாளி ஆகணுமா? 

ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் தனது கட்சிக்காக பிரத்யேக தொலைக்காட்சி ஒன்றை ஆரம்பிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

தலைவர், அல்லது சூப்பர் ஸ்டார் என அந்தத் தொலைக்காட்சிக்கு பெயர் சூட்ட முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மூன்று மாதங்களில்  புதிதாக தொடங்கப்பட உள்ள அந்த சேனலுக்கு அப்லிங் கொடுத்து உதவ ராஜ் டிவி நிர்வாகம் முன்வந்துள்ளதாகவும் கூறுகிறார்கள். இந்நிலையில், அவரது ஆதரவாளர்கள் இது குறித்து சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

ட்விட்டர் பக்கத்தில், ‘’தலைவர் நியூஸ் சேனல் ஆரம்பிக்கப்போவதாக சிலர் சொல்கிறார்கள். யானையை கட்டி மேய்க்கிற வேலை. எக்கச்ச செலவு ஆகும். அரசியலுக்கு வந்து விஜய்காந்தை போல தலைவர் கடனாளி ஆகணுமா? நமக்காக அரசியலுக்கு வரும் தலைவர் கடைசிவரை நல்லா இருக்கணும். மாற்றம் வேணும் என நினைத்தால் மக்கள் ஓட்டுபோடட்டும்.. இல்லை என்றால் அழிந்து போகட்டும்’’என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

 

’’அதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. விரைவில் தலைவர் தொலைக்காட்சி உதயமாகும். அரசியலில் தலைவரும் விஜயகாந்த் அவர்களும் ஒன்று அல்ல. நீண்ட ஆலோசனை அதற்கான திட்டம், செயல்பாடுகளுடன் தரமான தொலைக்காட்சி வரப்போகிறது. உண்மையை மட்டும் பேசும் ஊடகம் அதுவாக இருக்கும்’’என பதிவிட்டு வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!