தமிழக பாஜக தலைவர் எப்போது நியமிக்கப்படுவார் ? இல.கணேசன் வெளியிட்ட அதிரடி தகவல்!!

Published : Nov 12, 2019, 07:35 PM IST
தமிழக பாஜக தலைவர் எப்போது நியமிக்கப்படுவார் ? இல.கணேசன் வெளியிட்ட அதிரடி தகவல்!!

சுருக்கம்

தமிழகத்தில் வரும் டிசம்பர் முதல் வாரத்தில் பாஜக மாநில தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்றும் அதன் அடிப்படையில் பாஜக தலைவர் நியமிக்கப்படுவார் என்றும்  அக்கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை தெலங்கானா மாநில ஆளுநராக  நியமிக்கப்பட்டதை அடுத்து  அந்தப் பதவி காலியாக இருந்து வருகிறது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் தலைவர்  இல்லாமலேயே பாஜக செயல்பட்டு வருகிற்து.

பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் என பல பெயர்கள் தமிழக  பாஜக தலைவர் பெயருக்கு  அடிபடுகிறது.

இந்நிலையில் டிசம்பர் முதல் வாரத்தில் பாஜக மாநில தலைவர் தேர்தல் இருக்கும் என்று பாஜக மூத்த தலைவர்  இல. கணேசன் தகவல் தெரித்துள்ளார். 

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 'டிசம்பர் முதல் வாரத்தில் பாஜக மாநில தலைவர் தேர்தல் இருக்கும். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் டிசம்பர் 16 ஆம் தேதி  முதல் விருப்ப மனு விநியோகம் துவங்கும்' என்றும் இல.கணேசன் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?