வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர் கொரோனா வார்டில் மருத்துவ பணியை தொடங்க அனுமதி.. தமிழக அரசு அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published May 20, 2021, 11:52 AM IST
Highlights

ஆனாலும் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் வந்தபாடில்லை. மாறாக மக்கள் கூட்டங் கூட்டமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நாளொன்றுக்கு குறைந்தது 30 ஆயித்திற்கும் அதிகமானோர் நோய்த் தொற்றுக்கு ஆட்பட்டு வருகின்றனர்.  

வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர் மருத்துவ பணியை தொடங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2ம் அலை  பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த  பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. 

ஆனாலும் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் வந்தபாடில்லை. மாறாக மக்கள் கூட்டங் கூட்டமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நாளொன்றுக்கு குறைந்தது 30 ஆயித்திற்கும் அதிகமானோர் நோய்த் தொற்றுக்கு ஆட்பட்டு வருகின்றனர். சிறு சிறு மருத்துவமனைகள் முதல் அரசின் பெரிய மருத்துவமனைகள் வரை கூட்டம் நிரம்பு வழிகிறது. தொற்றுக்கு ஆட்படும் நோயாளிகளுக்கு போதிய படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் இன்றி மருத்துவர்கள் திண்டாடி வருகின்றனர். அதேபோல் ஊண்உறக்கமின்றி மருத்துவர்கள் தொடர்ந்து உயிர் காக்கும் சிக்கையில் தங்களை அற்பணித்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவர்களின் பற்றாக் குறையை போக்க தமிழக அரசு அதிரடியாக, வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 நபர்கள் மருத்துவ பணியை தொடங்க அனுமதி அளித்து  உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் பயிற்சிபெறும் வகையில், ஓராண்டு பணி புரிந்த பின்பே அவர்களுக்கு மருத்துவ பணி என்ற விதியும், வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் பயிற்சியின்போது 5 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதியும் ஏற்கனவே அமலில் உள்ள நிலையில், இந்த இரண்டு விதிகளையும் தளர்த்தி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள் தேவை கருதி தமிழக அரசு இந்த முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!