பி.ஜே.பி. 5 க்கு 5ம் அவுட் ... வழக்கம் போல் சொதப்பிய தேர்தல் கணிப்புகள்...

Published : Dec 11, 2018, 10:19 AM ISTUpdated : Dec 11, 2018, 10:21 AM IST
பி.ஜே.பி. 5 க்கு 5ம் அவுட்  ... வழக்கம் போல் சொதப்பிய தேர்தல் கணிப்புகள்...

சுருக்கம்

தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ.க. பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், தேர்தலுக்கு முன்பு வந்த கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் பொய்யாகி உள்ளன.

தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ.க. பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், தேர்தலுக்கு முன்பு வந்த கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் பொய்யாகி உள்ளன.

5 மாநிலத்தேர்தல் முடிவுகள் குறித்துக் கருத்துக்கணிப்புகள் வெளியிட்ட பெரும்பாலான ஊடகங்கள் பி.ஜே.பி. தனித்து ஆட்சி அமைக்கும் அல்லது இழுபறி இருக்கலாம் என்றே கணிப்புகள் வெளியிட்டிருந்தன. காங்கிரஸ்க்கு ராஜஸ்தானைத் தவிர எந்த மாநிலத்தையும் காங்கிரஸ் கைப்பற்றாது என்றே அனைத்துக் கருத்துக்கணிப்புகளும் இருந்தன.

அக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகி 5 மாநிலங்களில் 4ல் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது.

காலை 10 மணி நிலவரப்படி மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை முற்றிலும் இழந்தது. தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். ஆட்சியைப் பிடிக்க, மிஸோரத்தில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியைக் கைப்பற்றும் நிலைக்கு வந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

1 கோடி வாக்காளர்கள் நீக்கம்..! ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்..? புயலைக் கிளப்பும் பின்னணி..!
இந்த மூன்று நாடுகளின் ஜனாதிபதிகளைக் கொல்ல துடிக்கும் அமெரிக்கா..? டிரம்பின் சதித் திட்டம்..!