பறிபோகும் 5 எம்.எல்.ஏ.,க்களின் பதவி... சபாநாயகருடன் அவசர ஆலோசனை... அதிமுக அதிரடி முடிவு..!

By Thiraviaraj RMFirst Published Apr 26, 2019, 1:02 PM IST
Highlights

டி.டி.வி.தினகரன் மற்றும் கருணாஸ், தனியரசு, தமீம் அன்சாரி ஆகியோரின் எம்.எல்.ஏ பதவிகளை பறிக்க சபாநாயகர் தனபாலுடன் ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

டி.டி.வி.தினகரன் மற்றும் கருணாஸ், தனியரசு, தமீம் அன்சாரி ஆகியோரின் எம்.எல்.ஏ பதவிகளை பறிக்க சபாநாயகர் தனபாலுடன் ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள 5 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சபாநாயகர் தனபாலுடன்  சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகm,  அதிமுக அகொறடா ராஜேந்திரன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசாலம் கலைச்செல்வன் இரட்டை இலைசின்னத்தில் வென்ற தமிமுன் அன்சாரி,  தனியரசு, கருணாஸ் ஆகியோர் அதிமுக நிலைப்பாட்டுக்கு எதிராக இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  பிரபு, ரத்தினசபாபதுஇ, கலைச்செல்வன் ஆகியோர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர். டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு  நோட்டீஸ் அனுப்ப கொறடா கடந்த ஆண்டு பரிந்துரை அளித்ததாக தகவல் வெளியானது. 

டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோனது. தற்போது நடைபெற்றுள்ள 18 சட்டமன்றத்தேர்தல், அடுத்து நடைபெற உள்ள 4 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் பெருமபான்மையை நிரூபித்து ஆட்சியை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அதிமுக, மேலும் ஐந்து எம்.எல்.ஏக்களின் பதவியை காவு வாங்கி ஆட்சியைத் தொடர திட்டமிட்டுள்ளது. 
 

click me!