ஜெயலலிதா மரண விசாரணை... செக் வைத்த அப்பல்லோ மருத்துவமனை..!

Published : Apr 26, 2019, 11:45 AM IST
ஜெயலலிதா மரண விசாரணை... செக் வைத்த அப்பல்லோ மருத்துவமனை..!

சுருக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அதனை விசாரிக்க நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த ஆணியம் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

 

இந்நிலையில் உரிய தகவல்களை அளித்தும் மீண்டும் மீண்டும் விசாரணைக்கு ஆறுமுகசாமி ஆணையம் அழைப்பதாக உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று தலைமை நீதிபதி ரஞ்சக் கோஹாய் முன் விசாரணைக்கு வந்த அந்த மனுவில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக போதிய தகவல்களை அளித்தும் மீண்டும் மீண்டும் விசாரணைக்கு அழைக்கிறார்கள். 

ஆறுமுகசாமி ஆணையம் மருத்துவர்களை விசாரிக்க உகந்த ஆணையம் அல்ல. 21 பேர் கொண்ட மருத்துவக்குழுவை அமைத்தபிற்கே விசாரணை நடத்த மேண்டும். ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்தில் இந்த வழக்குத் தொடுக்கப்படவில்லை என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி அப்பல்லோ மருத்துவமனையில் கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.  

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!