இன்னொரு நாட்டிற்குள் அத்துமீறி கலவரம் செய்த சீனர்கள்..!! போலீசை அடித்து நொறுக்கி திமிர்த்தனம்..!!

By Ezhilarasan BabuFirst Published May 9, 2020, 5:52 PM IST
Highlights

போராட்டக்காரர்கள் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்தபோது ஏற்பட்ட மோதலில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிபஹதூர் பாஸ்நெட் உட்பட நான்கு காவல்துறையினர் காயமடைந்தனர்

நேபாள நாட்டில் சிக்கியுள்ள சுமார் 45 சீனர்கள் தங்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டுமென கோரிக்கை வைக்க பிரதமர் அலுவலகத்திற்கு வந்தபோது அவர்களுக்கும்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது . இதனையடுத்து அந்த 45 சீனர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக நேபாள போலீசார் தெரிவித்துள்ளனர் . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது, இந்நிலையில் தெற்காசிய நாடான இந்தியா இலங்கை பாகிஸ்தான் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தி உள்ளன . கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தியாவைப் போலவே நேபாளமும் மார்ச் 22 அன்று சர்வதேச விமானங்களை நிறுத்தியது. 

இந்த மாத இறுதி வரை கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் அறிவித்துள்ளது,   இந்நிலையில் சீனாவை சேர்ந்த சுமார் 45 பேர் நேபாளத்தில் ஊரடங்கில்  வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.  இதற்கிடையில் நேபாளத்தில் உள்ள அமெரிக்கா இங்கிலாந்து ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட  நாட்டினரை விமானங்கள் மூலம் மீண்டும் தங்கள் நாட்டிற்கு அழைத்துச் செல்ல அந்தந்த நாடுகள் ஏற்பாடு செய்துள்ளன . ஆனால்  சீன நாட்டினரை மீட்பதற்கு அதிகாரப்பூர்வ விமானங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை ,   இந்நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக நேபாளத்தில் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையான வறுமைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் , ஆகவே தங்களை மீண்டும்  சொந்த நாட்டிற்கே அனுப்பி வைக்க வேண்டுமென நேபாள பிரதமரை சந்தித்து முறையிட பிரதமர் அலுவலகத்திற்கு 45 சீனர்கள் குழுவாக சென்றதாக தெரிகிறது. 

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்ததாகவும்  ,   இதையடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் பின்னர் அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போலீசாரை அவர்கள் கல்லெறிந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது , போராட்டக்காரர்கள் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்தபோது ஏற்பட்ட மோதலில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிபஹதூர் பாஸ்நெட் உட்பட நான்கு காவல்துறையினர் காயமடைந்தனர்" என்று நேபாள காவல்துறை கண்காணிப்பாளர் சோமேந்திர சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த 45 பேரையும் கைது செய்துள்ள போலீசார் அவர்கள் தடையை மீறி பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு நுழைய முயற்சித்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.  ஆசியாவிலேயே  மிகக் குறைந்த அளவில் பாதிப்புகளைக் கொண்ட நாடாக நேபாளம் உள்ளது இதுவரையில் அங்கு 100 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. 
 

click me!