பொருளாதார நெருக்கடி.. இலங்கை அதிபர் வீட்டின் முன் வன்முறை.. 45 பேர் கைது..!

By Kevin Kaarki  |  First Published Apr 1, 2022, 10:59 AM IST

அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டின் முன் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து கொலோம்போ நகரின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டது. 


இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி சூழல் ஏற்பட்டு இருப்பதை அடுத்து அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியை கண்டித்து நேற்று இரவு திடீரென ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டின் முன் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து கொலோம்போ நகரின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டது. 

கைது:

Tap to resize

Latest Videos

திடீர் போராட்டம், வன்முறையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் நான்கு மணி நேரம் நீடித்த போராட்டம், அதன் பின்பு தான் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக கொலம்போவில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டது. இதை அடுத்து இன்று காலை 5 மணி அளவில் ஊரடங்கு நீக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று இரவு நடந்த வன்முறையில் தொடர்புடையதாக இதுவரை 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்து உள்ளனர். 

"அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டின் முன் ஏற்பட்ட வன்முறையில் ஏராளமான பொது மக்கள், ஐந்து காவல் துறை அதிகாரிகள் காயமுற்றனர். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. காயமுற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்," என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஊரடங்கு:

வன்முறை காரணமாக கொலம்போவின் வடக்கு, தெற்கு, மத்திய பகுதிகள், நுகேகோடா, மவுண்ட் லவினியா மறஅறும் கெலனியா காவல் துறை வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதிபர் கோத்தபய ராஜப்கசே வீட்டினுள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீய்த்து அடித்து தடுத்தனர். 

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தார் உடனடியாக உயர் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் கூறி பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது சிலர் அங்கிருந்த ராணு வாகம் ஒன்றுக்கு தீ வைத்தனர், சிலர் வீட்டு சுவரை இடித்து கற்களை பிடுங்கு போலீசார் மீது எறிந்தனர். இன் காரணமாக அந்த பகுதி முழுக்க போர்க் களம் போன்றே காட்சி அளித்தது.

நெருக்கடி:

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் வரலாறு காணாத வகையில் அதிகரித்து இருக்கிறது. மேலும் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதோடு மின் தட்டுப்பாடு காரணமாக இலங்கை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சுமார் 13 மணி நேரத்திற்கும் அதிகமான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மேலும் மின் பற்றாக்குறை காரணமாக தெரு விளக்குகள் அணைக்கப்பட்டு வருகின்றன. 

click me!