தனி ஆளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி...! அதிர்ச்சியில் பொதுமக்கள்

By Ajmal KhanFirst Published Apr 1, 2022, 10:53 AM IST
Highlights

விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உண்ணாவிரதப்போரட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 

ஓசூரில் சிப்காட்

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அருகே உள்ள உத்தனப்பள்ளி பகுதியில், ஓசூர் ஐந்தாவது சிப்காட் வளாகம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளது. இதற்காக,  உத்தனப்பள்ளி, அயரனப்பள்ளி ஊராட்சிகளில் உள்ள 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணியில் வருவாய்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.  பட்ஜெட் மீதான விவாதத்தின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தளி ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் பேசும்போது ஓசூரில் சிப்காட் அமைப்பதற்காக விவசாயிகளிடமிருந்து விளைநிலங்கள் கட்டாயப்படுத்தி வாங்கப்படுவதாகவும் தெரிவித்ததார். 

மக்களை கட்டாயப்படுத்தவில்லை

இதற்கு பதில் அளித்து பேசிய தொழில் துறை அமைச்சரான தங்கம் தென்னரசு, தமிழகத்தில் ஓசூரில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன் வருவதாக தெரிவித்தார் இதற்கு காரணம் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருக்கக்கூடிய பருவ கால சீதோசன நிலை ஓசூரில் நிலவுவதால் பெரும்பாலான நிறுவனங்களில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்து வருகின்றன என கூறினார். எனினும் தமிழக அரசிடம் போதிய அளவில் நிலம் கையில் இல்லாத பட்சத்தில் ஓசூரில் சிப்காட் 2 மற்றும் 3 அமைப்பதற்காக நிலங்கள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி  அவர்கள் விருப்பத்தின் பேரில் மட்டுமே நிலங்கள் வாங்க படுவதாகவும் எந்த விவசாயிகளையும் கட்டாயப்படுத்தி  வாங்கப்படவில்லை என தெரிவித்தார்.

தனி ஒருவராக போராட்டம்

இந்தநிலையில் தொழிற்சாலைகள் அமைக்கிறோம் என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதாக கூறி அந்த  அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான  கே.பி. முனுசாமி இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.  சூளகிரி தாலுகா அலுவலகம் முன்பு தனி ஒருவராக அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார். 5 ஆயிரம் விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாய நிலத்தை தொழிற்சாலை அமைக்கிறோம் என்ற பெயரில் விவசாயிகளின் நிலத்தை பறிக்காதே மாநில அரசே பறிக்காதே என்று வாசகம் பதியப்பட்டுள்ள பிளஸ் போர்டுக்கு முன்பு   தனி ஒருவராக கே.பி. முனுசாமி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.  இந்த போராட்டத்திற்கு அப்பகுதி மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளானர்.
 

click me!