40 திமுக எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம்… எங்க எடப்பாடியார் கண்ணச்சா அந்த கட்சியே காணாமப் போகும் !! ராஜேந்திர பாலாஜி அதிரடி !!

Published : May 02, 2019, 09:06 AM IST
40 திமுக எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம்… எங்க எடப்பாடியார் கண்ணச்சா அந்த கட்சியே காணாமப் போகும் !! ராஜேந்திர பாலாஜி அதிரடி !!

சுருக்கம்

எங்க கட்சி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தா ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது என கொந்தளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுக எம்எல்ஏக்கள் 40 பேர் எங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தொடர்பில் இருக்கிறார்கள்  என்றும், அவர் கண் அசைத்தால் திமுகவே காணாமல் போகும் என்றும் தெரிவித்தார்.  

அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர்  நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனை எதிர்த்து  திமுக சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபப்புரை மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எப்படியாவது இந்த அரவை கவிழ்த்துவிடு ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிவிடலாம் என கனவு காண்கிறார். ஆனால் அது ஒரு காலும் நடக்காது என அமைச்சர் தெரிவித்தார்.

அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தா ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது என கொந்தளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுக எம்எல்ஏக்கள் 40 பேர் எங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தொடர்பில் இருக்கிறார்கள்  என்றும், அவர் கண் அசைத்தால் திமுகவே காணாமல் போகும் என்றும் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!