’40 நாட்களாக வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தது வீண்...’#மே7அழிவின்ஆரம்பம்..!

Published : May 05, 2020, 03:13 PM IST
’40 நாட்களாக வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தது வீண்...’#மே7அழிவின்ஆரம்பம்..!

சுருக்கம்

40 நாட்களாக நீங்கள் கொண்டு வந்த திட்டங்கள், நீங்கள் செய்த நன்மைகள் அனைத்தும் வீண். 

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இந்நிலையில், #மே7அழிவின்ஆரம்பம் என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்விட்டர் பக்கத்தில் முதலிடத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

தமிழகத்தில் வருகிற 7-ந்தேதி முதல் சில நிபந்தனைகளுடன் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் திறந்து இருக்கும் என்றும், ‘பார்’கள் இயங்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தலைநகர் சென்னையில் டாஸ்மாக் திறக்கப்படும் அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளது தமிழக அரசு. 

இந்நிலையில், #மே7அழிவின்ஆரம்பம் என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதில், ‘’40 நாட்களாக நீங்கள் கொண்டு வந்த திட்டங்கள், நீங்கள் செய்த நன்மைகள் அனைத்தும் வீண்’’ என கீழ்கண்டவாறு பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..