கூடியது தமிழக அமைச்சரவை கூட்டம் – எடப்பாடி தலைமையில் முக்கிய ஆலோசனை...!!!

Asianet News Tamil  
Published : May 25, 2017, 04:13 PM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
கூடியது தமிழக அமைச்சரவை கூட்டம் – எடப்பாடி தலைமையில் முக்கிய ஆலோசனை...!!!

சுருக்கம்

4 th ministers meetting in edappadi head in tamilnadu government office

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 4 வது தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடியது. இதில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் அரசியல் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்.

அவரது தரப்பில் உள்ள எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களுமே அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கபட்டிருந்த போது சசிகலா உறுதியளித்த வாக்குறுதிகளை புதிதாக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி அரசு செய்ய தவறி விட்டதாக கூறி தோப்பு வெங்கடாசலம் அணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தற்போது பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் அவர் பங்கிற்கு முதலமைச்சரை சந்தித்து பேசிவிட்டு போயுள்ளார்.

இதனிடையே புதிய அரசான எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஏற்கனவே 3 அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளார்.

இந்நிலையில், இன்று 4 வது அமைச்சரவை கூட்டம் எடப்பாடி தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதில், அரசியல் நிலவரம் தமிழக பிரச்சனைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

மானிய கோரிக்கைகள் விவாதம் குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது.

இதில் பெரும்பாலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

 

PREV
click me!

Recommended Stories

குடும்ப ஆட்சிக்கும், தமிழக மக்களுக்குமான தேர்தல்.. திமுகவை எகிறி அடித்த நயினார் நாகேந்திரன்!
தேமுதிக-வுக்கு அடித்த ஜாக்பாட்.. கொண்டாட்டத்தில் விஜய பிரபாகரன்.. திமுக கூட்டணியின் மாஸ்டர் பிளான்..!