
மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களுக்கு பல்வேறு பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில், குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்கள் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது, அதுபோன்ற நலத்திட்டத்துக்கான பெயர்களில் இருந்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயர் நீக்கப்பட்டள்ளது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி நடத்தியது. இதையொட்டி, பெரும்பாலான மத்திய அரசின் திட்டங்களுக்கு முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோரின் பெயர்கள் வைக்கப்பட்டு இருந்தது.
கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சி ஆட்சி அமைத்தது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, முன்பு இருந்த மாற்றங்களை மாற்றி அமைத்து வருகிறது. இதை தொடர்ந்து, அனைத்து திட்டங்களுக்கும், 'பிரதம மந்திரி திட்டம்' என, பொதுவாக பெயரிடப்பட்டு வருகிறது.
கடந்த 2010ம் ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் பெண்களுக்கு நிதியுதவி அளிக்க ‘இந்திரா காந்தி மாத்ரித்வா சயோக் யோஜனா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு, இந்த திட்டத்தை விரிவுப்படுத்தியது. மேலும், அந்த திட்டத்தின் பெயரையும் மாற்றி ‘பிரதம மந்திரி மாத்ரித்வா சயோக் யோஜனா’ என மாற்றம் செய்துள்ளது.