மோடி படம் ஒட்டிய போஸ்டர்... பாஜக ஆதரவாளர்கள் 4 பேர் கைது..!

Published : Jun 01, 2020, 11:04 AM IST
மோடி படம் ஒட்டிய போஸ்டர்... பாஜக ஆதரவாளர்கள் 4 பேர் கைது..!

சுருக்கம்

மதுரையில் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் பாஜக நிர்வாகி ஒருவரின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர் ஒட்டிய இளைஞர் சேனா அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரையில் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் பாஜக நிர்வாகி ஒருவரின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர் ஒட்டிய இளைஞர் சேனா அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை, எல்லிஸ் நகர் பகுதியில் உள்ள கருமாரியம்மன் கோவில் எதிரே உள்ள சுவரில் இந்து இளைஞர் சேனையை சேர்ந்த முருகன், செந்தில்குமார், கருப்புசாமி, முத்துமாரி ஆகிய 4 பேர் ரவிக்குமார் என்பவரை வாழ்த்தி பிறந்தநாள் போஸ்டர் ஒட்டினார். ஒட்டப்பட்ட போஸ்டரில் பிரதமர் மோடியின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. இது தொடர்பாக எஸ்.எஸ் காலனி போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில் எஸ்.ஐ சுந்தரபாண்டியன் புகாரின் பேரில் போஸ்டர் ஒட்டிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை கைது செய்யப்பட்டனர்.

கைதுக்கான சரியான காரணம் தெரிவிக்கப்படாத நிலையில், அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மதுரையில் மிக பிரம்மாண்டமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வரும் நிலையில் மிகச்சிறிய அளவில் ஒட்டப்பட்ட போஸ்டரை, அனுமதி இன்றி ஒட்டியதாக போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பது, சம்பவத்தின் பின்னணியில், வேறு ஏதும் காரணம் உள்ளதா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!