டெல்லி பாகிஸ்தான் தூதரகத்தில் 2கருப்பு ஆடுகள்..! சாவு மணியடித்த வெளியுறவுத்துறை அமைச்சகம்.!!

By T BalamurukanFirst Published Jun 1, 2020, 9:44 AM IST
Highlights

டெல்லியில் உளவு பார்த்ததற்காக, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு டெல்லியை விட்டு உடனே வெளியேறுமாறு எச்சரித்திருக்கிறது வெளியுறவுத்துறை அமைச்சகம்.

டெல்லியில் உளவு பார்த்ததற்காக, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு டெல்லியை விட்டு உடனே வெளியேறுமாறு எச்சரித்திருக்கிறது வெளியுறவுத்துறை அமைச்சகம்.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

"பாகிஸ்தான் தூதரகத்தின் விசா பிரிவில் பணிபுரியும் "அபீத் உசேன்" மற்றும் "தாஹிர்கான்" ஆகியோரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது.இருவரும் பாகிஸ்தானின் இன்டர்சர்வீசஸ், இன்டலிஜென்ஸ் அல்லது ஐ.எஸ்.ஐ.யில் பணிபுரிந்தனர். இவர்கள் போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி வந்துள்ளனர்.


இந்த இரண்டு அதிகாரிகளும் தங்கள் அந்தஸ்துடன் பொருந்தாத செயல்களில் ஈடுபடுவதற்காக தகுதி இல்லாதவர்கள் என்று அறிவித்திருக்கிறது.24 நான்கு மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது.பாகிஸ்தானின் தூதர பணியின் எந்தவொரு உறுப்பினரும் இந்தியாவுக்கு விரோதமான செயல்களில் ஈடுபடக்கூடாது அல்லது அவர்களின் தூதரக அந்தஸ்துடன் பொருந்தாத வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
 

click me!