தமிழகத்தில் தொடங்கியது பஸ் போக்குவரத்து... நிம்மதி பெருமூச்சு விடும் பயணிகள்..!

By T BalamurukanFirst Published Jun 1, 2020, 9:10 AM IST
Highlights

தமிழகத்தில் 68 நாட்களுக்கு பிறகு இன்று முதல் பேருந்து மற்றும் ரயில் சேவை தொடங்கியது. பயணிகளுக்கு கிரிமி நாசினி திரவம் நடத்துனரால் வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே பஸ்சில் பயணிக்க முடியும். பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் பஸ் போக்குவரத்து ஏற்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 2 மாதத்திற்கு மேலாக 4 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், படிப்படியாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன. நேற்று இரவுடன் 4ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்தது. இந்த நிலையில் தேசிய ஊரடங்கு முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக 30ம் தேதி அறிவித்தது. இதில் நோய் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மட்டும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுதவிர, பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

 பொது பஸ் போக்குவரத்து இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இதை செயல்படுத்த தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது. இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி 7 மற்றும் 8 வது மண்டலம் தவிர்த்து அனைத்து மண்டலங்களுக்குள் 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பஸ்களும் இயக்க அனுமதிக்கப்படுகிறது. உள்ள மொத்த இருக்கைகளில், 60 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை. அனுமதிக்கப்பட்டவைகளைத் தவிர, மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கிடையேயுமான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது.

click me!