3900 பேருக்கு டெங்கு...!! பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 22, 2019, 3:57 PM IST
Highlights

இரண்டு ஊசி போட்டால் சரி ஆகி விடும் என்று பொதுவாக பெற்றோர்கள் நினைக்க கூடாது.மழைக்காலம் எங்களுக்கு சவலாக தான் உள்ளது,எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த ஆண்டு 3900 பேருக்கு டெங்கு இருப்பது  கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் கூட டெங்கு போன்ற காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து நாங்கள் அறிவுறுத்தல் செய்து வருகிறோம்.

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் வார்டை சுகாதர துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார், மேலும் சிகிச்சை விவரங்கள் குறித்து பெற்றோர்களிடம் கேட்டு அறிந்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

பெற்றோர்கள் விழிப்புணர்வோடு மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே முழுமையாக காய்ச்சல் பாதிப்பை தடுக்க முடியும்காய்ச்சல் பாதிப்பு என்றால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரின் முழுமையான ஆலோசனைக்குப் பின்னரே எந்த சிகிச்சையாக இருந்தாலும் எடுக்க வேண்டும் அதே போல் காய்ச்சல் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு அட்மிஷன் என்றால் மருத்துவர்கள் கூறும் ஆலோசனையை முழுமையாக பின்பற்ற வேண்டும். 

தமிழக சுகாதர துறை அரசு செயலாளர்கள் பீலா ராஜேஸ் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு வேண்டுகோள் -  டெங்கு குணப்படுத்த கூடிய நோய் தான். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் என்றால் இரத்த மாதிரியை கண்டிப்பாக எடுத்து பார்க்க வேண்டும் - டெங்கு அறிகுறி இருக்கும் பட்சத்தில் மருத்துவமனை குழந்தைகளுக்கு அறிகுறி உள்ளனவா என்பதை பெற்றோர்கள் பார்க்க வேண்டும் என்றார்.இரண்டு ஊசி போட்டால் சரி ஆகி விடும் என்று பொதுவாக பெற்றோர்கள் நினைக்க கூடாது. 

மழைக்காலம் எங்களுக்கு சவலாக தான் உள்ளது,எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.இதுவரை இந்த ஆண்டு 3900 பேருக்கு டெங்கு இருப்பது  கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் கூட டெங்கு போன்ற காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து நாங்கள் அறிவுறுத்தல் செய்து வருகிறோம். அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் கண்டிப்பாக டெங்கு காய்ச்சலுக்கு என்ன விதிமுறைகள் உள்ளதோ அதை பின்பற்ற வேண்டும். வதந்திகளை பரப்புவோர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
 

click me!