தமிழக நிதிநிலை சிக்கலை சரி செய்ய 3 ஆண்டுகளாகும்... அதிர்ச்சி கொடுத்த நிதி அமைச்சர்..!

By vinoth kumarFirst Published Aug 13, 2021, 11:04 AM IST
Highlights

அரசின் நிதிநிலையை சீர்படுத்துவோம் என மக்களுக்கு நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றுவோம். 

மாநில அரசின் நிதியை திசை திருப்பும் வகையில் ஒன்றிய அரசின் வரிமுறை இருக்கிறது என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியமைத்த பின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர், 2021 - 2022ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட நிதி நிலை அறிக்கை இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன், சட்டப்பேரவையில் முதன் முறையாக இன்று காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் உரையாற்றி வருகிறார். ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இதற்கு ஏற்ப சேவையாற்ற உள்ளோம். கருணாநிதியின் நிர்வாக திறமை அனைவரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. 

அரசின் நிதிநிலையை சீர்படுத்துவோம் என மக்களுக்கு நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றுவோம்.  திருத்திய வரவு செலவு அறிக்கை. இந்த நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு பொருந்தும். 6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.

ஒரே ஆண்டில் செய்து முடிக்க இயலாத அளவுக்கு பணி மிகக் கடுமையாக உள்ளது. பணிகளை செய்து முடிக்க 2,3 ஆண்டுகள் வரை முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். மாநில அரசின் நிதியை திசை திருப்பும் வகையில் ஒன்றிய அரசின் வரிமுறை இருக்கிறது. 

கொரோனா 2வது அலை, ஏற்கனவே பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. அரசின் கடன்சுமையை சரி செய்து நிதிநிலையை மேம்படுத்துவது நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று. எந்தவொரு சிக்கல்களையும் சரி செய்யும் முதல்படி, அதன் ஆழத்தை புரிந்து கொள்வது. கடந்த அரசின் நிதி நிர்வாக தவறுகள், வெள்ளை அறிக்கையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்றார். 

click me!