3 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் இன்று அறிவிப்பு ! நண்பகல் 12 மணிக்கு வெளியிடுகிறார் தலைமை தேர்தல் ஆணையர்!!

Asianet News Tamil  
Published : Jan 18, 2018, 09:57 AM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
3 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் இன்று அறிவிப்பு ! நண்பகல் 12 மணிக்கு வெளியிடுகிறார் தலைமை தேர்தல் ஆணையர்!!

சுருக்கம்

3 states assembly electio date announce today

மேகாலயா, திரிபுரா மற்றும்  நாகாலாந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷன் இன்று  நண்பகல் 12 மணிக்கு அறிவிக்க உள்ளது.

கடந்த 2013 ம் ஆண்டு மார்ச் மாதம் 7 ம் தேதி பதவியேற்ற மேகாலயா சட்டசபையின் பதவிகாலம் வரும் மார்ச் மாதம் 6 ம் தேதியுடன் முடிவடைகிறது.

2013 ம் ஆண்டு மார்ச் 14 ம் தேதி பதவியேற்ற நாகாலாந்து சட்டசபையின் பதவிகாலம் வரும் மார்ச் மாதம் 13 ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதே போன்று 2013 ம் ஆண்டு மார்ச் 15 ம் தேதி பதவியேற்ற திரிபுரா மாநில சட்டசபையின் பதவி காலம் வரும் மார்ச் 14 ம் தேதியுடன் முடிவடைகிறது.

தலா 60 இடங்களைக் கொண்ட இந்த  3 மாநில சட்டசபையின் பதவிகாலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைவதால், அதற்கு முன் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து 3 மாநிலங்களுக்கான  சட்டசபை தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் இன்று நண்பகல் 12 மணியளவில் வெளியிட உள்ளது.

PREV
click me!

Recommended Stories

தமிழக எம்.பி.களுக்கு செம டோஸ் விட்ட ராகுல் காந்தி..? டெல்லியில் நடந்தது என்ன..? செல்வப்பெருந்தகை ஓபன் டாக்
விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!