பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு..! பரபரப்பு தீர்ப்பு வழங்கிய கோவை நீதிமன்றம்

By Ajmal Khan  |  First Published Jun 13, 2023, 8:07 AM IST

கோவையில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தின் மீது 2018ல்  பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் , தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மூன்று பேருக்கு  ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
 


பாஜக அலுவலகம்-பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை சித்தாபுதூர் சாலையில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தின் மீது கடந்த 2018 மார்ச் 7-ம் தேதி அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். அதில் ஒரு குண்டு, பாஜக அலுவலகம் அருகேயும்,  சாலையில் நின்றிருந்த ஆட்டோ அருகே விழுந்து வெடித்து சிதறியது.  இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தந்தை பெரியார் அமைப்பை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டபோது கடந்த 2018 ஆம் ஆண்டு திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டது. இது தொடர்பாக தமிழகத்தில்  பேட்டியளித்த பாரதிய ஜனதா கட்சியின்தேசிய தலைவர் எச்.ராஜா தமிழகத்திலும் தந்தை பெரியார் சிலை அகற்றப்படும் என தெரிவித்தார். 

Tap to resize

Latest Videos

காவல்நிலையத்தில் திருடர்களுடன் பழகியவர் அண்ணாமலை.. 100 ஓட்டு கூட கிடைக்காது - நடிகர் எஸ்.வி சேகர் சுளீர்

பெரியார் சிலை அவமதிப்பு

இதனைத் தொடர்ந்து அடுத்த சில தினங்களில் திருப்பத்தூர் பகுதியில் இருந்து பெரியார் சிலை பா.ஜ.கவினரால் உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில் உள்ள பாஜக அலுவலகத்தின் மீது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைப்பைச் சேர்ந்த கோபால், ஜீவா, கௌதம் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

3 பேருக்கு 7 ஆண்டு தண்டனை

இதனையடுத்து நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் குற்றவாளிகள் மூன்று பேருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா 1000 ரூபாய் அபராதமும் விதித்து குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றம் நீதிபதி சசிரேகா தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து தந்தை பெரியார் திராவாட கழகத்தை சேர்ந்த மூன்று பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படியுங்கள்

தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கமா.? விடாப்பிடியாக இருக்கும் அதிமுக- நடக்கப்போவது என்ன.?

click me!