3 துணை முதலமைச்சர்களை நியமித்த எடியூரப்பா ! அமைச்சர்களுக்கு இலாகாகக்கள் ஒதுக்கீடு !

By Selvanayagam PFirst Published Aug 27, 2019, 8:45 AM IST
Highlights

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அமைச்சரவையில் கடந்த வாரம் 17 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்ட நிலையில் அவர்களில் 3 பேர்  துணை முதலமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கியும் உத்தரவிட்டார்.

கர்நாடகா  மாநிலத்தில் முதலமைச்சர் எடியூரப்பா அமைச்சரவையில் ஏற்கனவே 17 அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில் துணை முதலமைச்சர்களாக கோவிந்த் மக்தப்பா கரஜல், அஷ்வத் நாராயண், லக்ஷ்மன் சங்கப்பா சவடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான  உத்தரவை முதலமைச்சர் எடியூரப்பா பிறப்பித்தார். மேலும் அமைச்சர்களின் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கர்நாடகா அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு விவரம் வருமாறு:-

1. முதலமைச்சர்  எடியூரப்பா - மந்திரிகளுக்கு ஒதுக்கப் படாத அனைத்து துறைகளும்.
2. துணை ஆமைச்சர் கோவிந்த் கார்ஜோள் - பொதுப்பணி, கூடுதல் பொறுப்பாக சமூக நலன்
3. துணை முதலமைச்சர்  டாக்டர் அஸ்வத் நாராயண் - உயர்கல்வி, தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், அறிவியல் தொழில்நுட்பம்
4. துணை முதலமைச்சர்  லட்சுமண் சவதி - போக்கு வரத்து


5. கே.எஸ்.ஈசுவரப்பா - கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ்
6. ஆர்.அசோக் - வருவாய், அறநிலையத்துறை நீங்கலாக
7. ஜெகதீஷ் ஷெட்டர் - பெரிய, சிறிய தொழில்கள், சர்க்கரை நீங்கலாக
8. பி.ஸ்ரீராமுலு - சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்
9. எஸ்.சுரேஷ்குமார் - தொடக்க, உயர்நிலை பள்ளி கல்வி, சகாலா திட்டம்
10. வி.சோமண்ணா - வீட்டு வசதிகோடா சீனிவாசபூஜாரி
11. சி.டி.ரவி - சுற்றுலா, கூடுதல் பொறுப்பாக கன்னட கலாசாரம்


12. பசவராஜ் பொம்மை - போலீஸ், உளவுத்துறை நீங்கலாக
13. கோடா சீனிவாச பூஜாரி - அறநிலையத்துறை, மீன் வளம், துறைமுகம்
14. ஜே.சி.மாதுசாமி - சட்டம், சட்டசபை விவகாரம், கூடுதல் பொறுப்பாக சிறிய நீர்ப்பாசனம்
15. சி.சி.பட்டீல் - கனிமம், நில அறிவியல்
16. எச்.நாகேஸ் - கலால்
17. பிரபுசவான் - கால்நடை
18. சசிகலா ஜோலே - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள்

click me!