சென்னையின் அடுத்த மேயர் இவர் தானாம் ! உற்சாகத்தில் உடன் பிறப்புகள் !!

Published : Aug 27, 2019, 07:29 AM IST
சென்னையின் அடுத்த மேயர் இவர் தானாம் !  உற்சாகத்தில்  உடன் பிறப்புகள் !!

சுருக்கம்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில் சென்னை மேயர் வேட்பாளராக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியை நிறுத்தி வெற்றி பெற வைத்து மேயராக்கி விட வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் திமுக இளைஞரணி செயலாளராக  உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். என்ன தான் ஸ்டாலின் மகன் என்றாலும் கட்சிக்காக எந்த பணிகளும் செய்யாமல் கட்சிப்பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. ஸ்டாலினைப் பொறுத்தவரை அவரது வளர்ச்சி படிப்படியானது.

சென்னை . மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக என்று முன்னேறி இன்று கழக தலைவராகி உள்ளார். முதலமைச்சராகும் வாய்ப்பு கூட அவருக்கு உள்ளது. அதே போல், மகன் உதயநிதியையும் சென்னையின் மேயராக்கிட வேண்டும் எனும் ஆசை ஸ்டாலின் மற்றும் திருமதி ஸ்டாலின் இருவருக்குமே வந்திருக்கிறது என்கிறார்கள் அக்கட்சியின் சீனியர்கள்.
.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி என இரு தொகுதி இடைத்தேர்தல்களில் ஏதோ ஒரு தொகுதியில் அவரை போட்டியிட வைக்கலாமென்று கழக சீனியர்கள் சிலர் கருத்துச் சொல்லி, கவனம் ஈர்க்கப் பார்த்தனர். ஆனால் மறுத்து தலையசைத்துவிட்டார் ஸ்டாலின். தன்னைப் போலவே தன் மகனையும் மேயர் பதவியில் அமர வைத்து அழகு பார்ப்பதே அவரது விருப்பமாக இருக்கிறது.

உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் சென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு உதயநிதியை போட்டியிட வைக்கும் திட்டத்தில் ஸ்டாலின் இருக்கிறாராம். 

அதே நேரத்தில் இதற்கு செக் வைக்கும் வகையில் சென்னை மாநகராட்சியை பெண்களுக்கு ஒதுக்கலாமா ? அல்லது தலித்துகளுங்ககான மாநகராட்சியாக மாற்றிவிடலாமா என அதிமுக தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெள்யாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு
நம்ம சமூகத்தவர் முதல்வரா ஜெயிக்கணும்னா இதுதான் சான்ஸ்... டெல்லியில் எஸ்.பி.வேலுமணியின் சீக்ரெட் மூவ்..!