எங்களை யார் ? அழிக்க நினைத்தார்களோ… அவர்கள் தற்போது அழிஞ்சிட்டிருக்காங்க ! தினகரனை கிழித்து தொங்கவிட்ட எடப்பாடி!!

Published : Aug 27, 2019, 08:11 AM IST
எங்களை யார்  ? அழிக்க நினைத்தார்களோ… அவர்கள் தற்போது அழிஞ்சிட்டிருக்காங்க !  தினகரனை கிழித்து தொங்கவிட்ட எடப்பாடி!!

சுருக்கம்

அதிமுகவை  அழிக்க நினைத்தவர்கள் எல்லலாம் தற்போது அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பேசினார்.  

காஞ்சீபுரம் மாவட்ட அமமுக அமைப்பு செயலாளரும், முன்னாள்  எம்.எல்.ஏ.வுமான வாசுதேவன் தலைமையில் திருப்போரூர் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி, சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது.

இந்த  நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 3,000-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். 

இதையடுத்து காஞ்சீபுரம் மத்திய மாவட்ட அதிமுக  சார்பில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது.

இதையடுத்து கூட்டத்தில் பேசிய டுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , அதிமுகவை வீழ்த்தக்கூடிய சக்தி எந்த கட்சிக்கும் இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்கும் விதமாக அபரிமிதமான வளர்ச்சியை எட்டிக்கொண்டு இருக்கிறோம். 

நமது இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் தான் இப்போது அழிந்து போய்க்கொண்டிருக்கும் காட்சியை பார்த்து கொண்டிருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைப்பு செயலாளர் சி.பொன்னையன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?
தமிழகம், புதுவையை தொடர்ந்து கேரளாவில் கடை விரிக்கும் விஜய்..? கொச்சியில் கூட்டம்