நாளை... திக் திக் 2ஜி தீர்ப்பு...! திரும்பவும் திஹாரா? திரும்பி வருவார்களா!?

 
Published : Dec 20, 2017, 08:00 PM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
நாளை... திக் திக் 2ஜி தீர்ப்பு...! திரும்பவும் திஹாரா? திரும்பி வருவார்களா!?

சுருக்கம்

2G spectrum case final judgement tomorrow

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2G அலைகற்றை முறைகேடு வழக்கில் நாளை, டிசம்பர் 21  ஆம் தேதி தீர்ப்பு வெளியாக  உள்ளது.

கடந்த 2004-2009 ஆகிய ஆண்டுகளில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தது.இது தொடர்பாக திமுக உறுப்பினர் கனிமொழி, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா உள்ளிட்ட14 பேர் மீதும், 3 தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து,சிபிஐ விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில்,கடந்த ஆறு ஆண்டுகளாக சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது.

இதன் இறுதி கட்ட தீர்ப்பு நாளை 21-ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2G அலைகற்றை முறைகேடு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்க  உள்ளதால்,கருணாநிதி வீடு,கலைஞர் டிவி வட்டாரங்களில் பீதி அடைய வைத்துள்ளது.

ஒரு பக்கம் ஆர்.கே நகர் இடைதேர்தல் மறுபக்கம் தீர்ப்பு....சாதகமா  அமையுமா ? பாதகமா மாறுமா? நாளைய தினம்...திமுகவிற்கு எப்படி அமைய போகிறது என்பதை  பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!